எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
வாய்ப்பு விஜய் சேதுபதி நடிப்பில் கடந்தாண்டு வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பினார் விக்னேஷ் சிவன். இப்படத்தை தொடர்ந்து அவருக்கு அஜித்தை இயக்கும்மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் AK62 படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது. தீவிர அஜித் ரசிகரான விக்னேஷ் சிவன் இந்த வாய்ப்பை சரிவர பயன்படுத்துவார் என கோலிவுட் வட்டாரங்களால் பேசப்பட்டு வந்தது. இதையடுத்து AK62 படத்தின் கதையை தயார் செய்யும் பணியில் இறங்கினார் விக்னேஷ் சிவன்
ஷாக் கொடுத்த அஜித் கடந்த பத்து மாத காலமாக கதையை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார் விக்னேஷ் சிவன். இதையடுத்து ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென விக்னேஷ் சிவனின் கதை பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் அஜித் மற்றும் லைக்கா AK62 படத்திலிருந்து விக்னேஷ் சிவனை அதிரடியாக நீக்கிவிட்டனர். இது கோலிவுட் வட்டாரத்தையே அதிர்ச்சியாக்கியது. அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு பின்பு இயக்குனரை படத்திலிருந்து நீக்கியது ரசிகர்கள் உட்பட அனைவரும் ஷாக்காகவே இருந்தது. இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான விக்னேஷ் சிவன் தன் அடுத்த படத்தின் வெற்றியின் மூலம் தன்னை நிரூபிக்கும் முனைப்பில் இருக்கின்றார்
கமல் தயாரிப்பில் இதைத்தொடர்ந்து ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இளைஞர்களை கவரும் வகையில் ஒரு காதல் கதையை விக்னேஷ் சிவன் உருவாக்கியுள்ளதாகவும், இப்படத்தில் நாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் எனவும் தகவல்கள் வருகின்றன. இதையடுத்து விரைவில் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது
நழுவிப்போன வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு AK62 படத்தையடுத்து மேலும் ஒரு படவாய்ப்பு கைநழுவி போனது. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி பல படங்களை தயாரித்து வருகின்றனர். இவர்களின் தயாரிப்பில் சமீபகாலமாக வெளியான படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிகளை பெறவில்லை. இதையடுத்து கடந்தாண்டு கவின் நடிப்பில் ஊர்க்குருவி என்ற படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவனிடமிருந்து ஊர்க்குருவி திரைப்படம் வேறொரு தயாரிப்பு நிறுவனத்திற்கு கைமாறியுள்ளதாம். மேலும் கவினுக்கு பதிலாக இப்படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின் குமார் நாயகனாக நடிக்க இருக்கிறாராம். தொடர் தோல்விகளால் தயாரிப்பு நிறுவனம் சற்று நஷ்டத்தில் இருப்பதால் இப்படத்தை விக்னேஷ் சிவனால் தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தான் இப்படம் கைமாறிப்போனதாக தகவல்கள் வருகின்றன.