விற்பனைக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் அமோக வரவேற்பினை பெற்ற ஆஃப் ரோடர் மஹிந்திரா தார் எஸ்யூவி உற்பத்தி எண்ணிக்கை 1,00,000 வெற்றிகரமாக கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.
2010-ல் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட தார் எஸ்யூவி நல்ல வரவேற்பினை பெற்றது. அதனை தொடர்ந்து பல மாற்றங்களை பெற்ற தார் எஸ்யூவி அக்டோபர் 2020-ல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. விற்பனைக்கு வந்த முதல் மூன்று வாரங்களுக்குள் 15,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை குவித்தது, அந்த ஒரு வருடத்திற்குள் 75,000 முன்பதிவுகளை பெற்றது. தற்பொழுதும் இந்த எஸ்யூவி மாடலுக்கு காத்திருப்பு காலம் ஒரு ஆண்டு வரை உள்ளது.
மஹிந்திரா தார்
தார் காரில் 2.0 லிட்டர் Mstallion பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 5000 RPMல் 150hp குதிரைத்திறன் மற்றும் 1500-3000rpm-ல் 320 Nm முறுக்குவிசை (ஆட்டோமேட்டிக்) மற்றும் 1250-3000rpm-ல் 300 என்எம் முறுக்குவிசை (மேனுவல்) வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.
அதிகபட்சமாக 3750 RPM -ல் 130 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 300 என்எம் முறுக்குவிசை திறனை 1600 – 2800 RPM -ல் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.
மஹிந்திரா தார் 5-கதவு கொண்ட மாடலை தயாரிக்கும் பணியில் உள்ளது. இது 5-கதவு மாடல் மாருதி ஜிம்னிக்கு போட்டியாக இருக்கும்.