எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
இந்தியாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் மோட்டோரோலா நிறுவனம் மிக அதிக கவனம் செலுத்துகிறது. குறிப்பாக 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் செக்மென்ட் ஸ்மார்ட்போன்களில் 5G மற்றும் 4G என இரு வகைகளிலும் பல போன்களை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வரிசையில் புதிய ஒரு மாடலாக மோட்டோரோலா நிறுவனம் அதன் Moto G13 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Mediatek Helio G85 SoC சிப் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6GB ஸ்டோரேஜ் மாடல் 9,499 ஆயிரம் ரூபாய்க்கு தொடங்குகிறது.
இதில் 4GB LPDDR4x RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வரை உள்ளது. இதில் MicroSD ஸ்லாட் இருப்பதால் நாம் இதன் ஸ்டோரேஜ் அளவை நீட்டித்துக்கொள்ளலாம். இதில் சைடு மவுண்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார் வசதி உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 OS கொண்டு இயங்குகிறது. இதில் 6.5 இன்ச் IPS LCD டிஸ்பிளே வசதி, 576GHZ டச் சாம்ப்ளிங் ரேட், 89.47% ஸ்க்ரீன் பாடி ரேஷியோ உள்ளது. இதன் வெளிநாட்டு மாடல் FHD+ Resolution வசதி கொண்டிருந்தாலும் இதில் HD+ வசதி மட்டுமே உள்ளது.
மேலும் 5000mAh பேட்டரி வசதி, 10W சார்ஜிங் உள்ளது. ஆனால் இதே பட்ஜெட்டில் பல ஸ்மார்ட்போன்கள் 18W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்குவதால் இது ஒரு பின்னடைவு. கேமரா என்று வந்துவிட்டால் இதில் 50MP கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார், 2MP மேக்ரோ கேமரா உள்ளது. இதன் முன்பக்கம் 8MP செல்பி கேமரா வசதி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்