எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Naga Chaitanya and Sobhita Dhulipala picture: நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் லண்டனில் இருக்கும் உணவகத்திற்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.
நாக சைதன்யாசமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அவர்கள் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் நாக சைதன்யாவும், பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பேச்சு கிளம்பியது. அவர்கள் இருவரும் சேர்ந்து லண்டனில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தால் காதல் பேச்சு கிளம்பியது. இந்நிலையில் மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது.
Samantha:யாரையாவது காதலிக்கச் சொன்ன ரசிகை: சமந்தா பலே பதில்
https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/please-date-someone-says-a-fan-samantha-has-this-reply/articleshow/99024386.cms
லண்டன் லண்டனில் இருக்கும் ஜாமவார் என்கிற உணவகத்திற்கு சாப்பிட சென்றிருக்கிறார்கள் நாக சைதன்யாவும், சோபிதாவும். அந்த உணவகத்தில் வேலை செய்யும் சமையல் கலைஞரான சுரேந்தர் மோகன் நாக சைதன்யாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அப்பொழுது அந்த புகைப்படத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. தற்போது அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
காதல் காதல்
சுரேந்தர் மோகன் அருகில் நாக சைதன்யா நிற்க அவர்களுக்கு பின்னால் இருக்கும் இடத்தில் சோபிதா துலிபாலா அமர்ந்திருக்கிறார். அவர் கையை வைத்து முகத்தை மூடியபோதிலும் சோபிதா தான் என்பது தெளிவாக தெரிகிறது. இதையடுத்து தான் நாக சைதன்யாவும், சோபிதாவும் காதலிப்பது உறுதி என ரசிகர்கள் பேசத் துவங்கிவிட்டார்கள்.Samantha:யாரையாவது காதலிக்கச் சொன்ன ரசிகை: சமந்தா பலே பதில்
வீடுNaga Chaitanya:சமந்தா வசிக்கும் ஏரியாவில் ரூ. 15 கோடிக்கு வீடு வாங்கி குடியேறிய மாஜி கணவர்ஹைதராபாத்தில் இருக்கும் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் ரூ. 15 கோடிக்கு வீடு வாங்கி குடியேறியிருக்கிறார் நாக சைதன்யா என தகவல் வெளியானது. அதே பகுதியில் தான் சமந்தா வசித்து வருகிறார். அதனால் நாக சைதன்யாவும், சமந்தாவும் மீண்டும் சேரக்கூடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் தான் நாக சைதன்யா, சோபிதாவின் லண்டன் புகைப்படம் வெளியாகி அவர்களை கவலை அடைய செய்துள்ளது.
சமந்தாசமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் சேர்ந்து வாழ்வது பற்றி யோசிக்கவில்லை. இருவரும் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டார்கள். இருப்பினும் அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள். அவர்களை சேர்த்து வைக்குமாறு நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனாவிடம் கூட ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
கெரியர்கெரியரை பொறுத்தவரை வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தில் நடித்து முடித்துள்ளார் நாக சைதன்யா. சமந்தாவோ தான் குணசேகர் இயக்கத்தில் நடித்திருக்கும் சாகுந்தலம் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். ஏப்ரல் மாதம் 14ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது சாகுந்தலம். அந்த படத்தை விளம்பரம் செய்வதில் பிசியாக இருக்கிறார். மேலும் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சிடாடல் வெப்தொடரில் பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து நடித்து வருகிறார்.