எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பத்து பல படம் மார்ச் 30ம் தேதி அதாவது நாளை தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.
பத்து தல படத்தில் சிம்புவுக்கு ஜோடி கிடையாது. கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடித்துள்ளார். பத்து தல படத்தில் நடிக்க ப்ரியா பவானிசங்கருக்கு ரூ. 70 லட்சம் சம்பளம் கொடுத்திருக்கிறார்கள்.
யாரும் எதிர்பாராவிதமாக பத்து தல படத்தில் ராவடி என்கிற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார் ஆர்யாவின் மனைவி சயீஷா. அவர் குத்தாட்டம் போட்டது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
அந்த குத்தாட்ட பாடல் வீடியோவுக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 5 நிமிடம் வரும் ராவடி பாடலுக்கு டான்ஸ் ஆட ரூ. 40 லட்சம் வாங்கியிருக்கிறார் சயீஷா.
Ajith: சிம்பவுவை தல, தலனு கூப்பிட்ட சாண்டி மாஸ்டர்: யாருய்யா தலனு கெளம்பிய அஜித் ரசிகர்கள்
28 நாட்கள் டேட்ஸ் கொடுத்த ஹீரோயின் ப்ரியா பவானிசங்கருக்கு ரூ. 70 லட்சம் தான். ஆனால் 3 மணிநேரம் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட சயீஷாவுக்கு ரூ. 40 லட்சமா என ரசிகர்கள் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆர்யாவை திருமணம் செய்து கொண்ட சயீஷாவுக்கு அரியானா என்கிற மகள் இருக்கிறார். குழந்தை பெற்ற பிறகு பிரேக் எடுத்த சயீஷா வந்துட்டேன், மறுபடியும் ஹீரோயினாக வந்துட்டேனு சொல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் அவரோ குத்துப் பாடல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். சயீஷா டான்ஸ் ஆடுவதில் வல்லவர். அவர் டான்ஸ் ஆடினால் ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ஷூட்டிங்ஸ்பாட்டில் சயீஷா ஆடினால் அங்கிருக்கும் அனைவரும் அசந்து போய் பார்ப்பார்கள். இதை நேரில் பார்த்தவர்களே தெரிவித்துள்ளனர். சயீஷாவின் நடனத் திறமை குறித்து சில ஹீரோக்களே வியந்து பேசியிருக்கிறார்கள்.
இந்நிலையில் தான் அவர் சிம்பு படத்தில் குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறார். அவர் குத்தாட்டம் போட்டாலும் அது ஆபாசமாக இல்லை. சயீஷா ரொம்ப க்யூட்டாக இருக்கிறார் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல நடிகைகள் ஒரு படத்தில் குத்தாட்டம் போட பெரிய தொகையை சம்பளமாக வாங்குவது வழக்கமாகிவிட்டது. படம் முழுக்க நடிப்பதை விட ஒரு பாட்டுக்கு ஆடி கை நிறைய சம்பாதிக்கலாம் என்று சில நடிகைகள் குத்துப்பாடலில் ஈடுபாடு காட்டுகிறார்கள்.
முன்னதாக அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமானு குத்தாட்டம் போட சமந்தாவுக்கு ரூ. 5 கோடி சம்பளமாக பேசப்பட்டது என தகவல் வெளியானது. அடேங்கப்பா ஒரு பாட்டுக்கு ரூ. 5 கோடியா என ரசிகர்கள் வியந்தார்கள்.
அத்துடன் ஒப்பிடும்போது சயீஷா வாங்கிய தொகை ஒன்றும் பெரிது இல்லை என்கிறார்கள் ரசிகர்கள். ரீ என்ட்ரி கொடுத்துள்ள சயீஷா நல்ல கதைக்காக காத்திருக்கிறாராம். கதை கிடைத்தால் உடனே ஹீரோயினாக நடிக்க தயாராக இருக்கிறாராம்.