எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
எதிர்பார்ப்பு தொடர் வெற்றிகளில் இருக்கும் சிம்பு அடுத்ததாக பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நாளை திரையில் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. பாடல்கள், ட்ரைலர், சிம்புவின் நடிப்பு என பல விஷயங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் மாநாடு, வெந்து தணிந்தது காடு என சிம்புவின் படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்துள்ளதால் அவரது மார்க்கெட் ஏறுமுகத்தில் இருக்கின்றது. இதன் காரணமாக படத்தின் வியாபாரமும் அமோகமாக இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் முன்பதிவு எதிர்பார்த்ததை விட அமோகமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன
ஆரம்பப்புள்ளி கன்னடத்தில் வெளியான MUFTI என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்யத்தான் MUFTI படத்தின் இயக்குனர் நார்தன் தமிழுக்கு வந்தார். அப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த ஷிவ்ராஜ்குமார் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க கதையின் நாயகனாக கௌதம் கார்த்திக் நடித்து வந்தார். ஆனால் தயாரிப்பாளர் சிம்புவை நாயகனாக வைத்து கதையை மாற்றும்படி இயக்குனரிடம் கூறியுள்ளார். இதற்கு இயக்குனர் மறுப்பு தெரிவிக்கவே பிரச்சனை ஆரம்பமானது. இதையடுத்து இப்படத்திலிருந்து நார்தன் விலக கிருஷ்ணா இயக்குனராக ஒப்பந்தமானார். மேலும் தயாரிப்பாளர் கூறியதை போல சிம்புவை நாயகனாக வைத்து கதையை முற்றிலும் மாற்றினார் கிருஷ்ணா.
பிரச்சனைகள் 2019 ஆம் ஆண்டு பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. இதையடுத்து இயக்குனர் மாற்றம், கொரோனா ஊரடங்கு, நிதி பிரச்சனை என பல சிக்கல்களில் சிக்கியது பத்து தல. ஒருகட்டத்தில் இப்படம் கைவிடப்போவதாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் எப்படியோ ஒரு வழியாக பத்து தல திரைப்படம் முடிவடைந்து இன்று ரிலீசுக்கு தயாராக இருக்கின்றது. மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றியால் சிம்புவின் மார்க்கெட் உயர அது பத்து தல படத்தின் வியாபாரத்திற்கு பெரிதும் கைகொடுத்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இப்படம் நாளை திரையில் வெளியாகவுள்ளது.
சிம்புவின் பெருந்தன்மை முதலில் பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக் தான் நாயகனாக நடித்தார். பின்பு கதையில் பல மாற்றங்களை செய்து சிம்பு நாயகனாகிவிட்டார். இருந்தாலும் கௌதம் கார்திக்கிற்கும் சரி சமமான ரோலை கொடுக்குமாறு சிம்பு கூறியதாக இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். பத்து தல என் படமாக மட்டும் இருக்கக்கூடாது, இது கௌதம் கார்த்திக்கின் படமாகவும் இருக்கவேண்டும் என சிம்பு கிருஷ்ணாவிடம் தெரிவித்துள்ளார். இது படக்குழுவை சார்ந்த அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்ததாம். மேலும் இப்படத்தின் மூலம் கௌதம் கார்த்திக்கிற்கு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும் எனவும் சிம்பு கூறியுள்ளார். எந்த ஈகோவும் இல்லாமல் சிம்பு இவ்வாறு பெருந்தன்மையாக நடந்துகொண்டது கோலிவுட் வட்டாரங்களை சார்ந்தவர்களால் பாராட்டப்பட்டு வருகின்றது