பாஜகவுடனான அதிமுக கூட்டணி தொடர்வதாக, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் பேட்டியளித்த அவர், அதிமுக ஆட்சியில் 110 விதியின்கீழ் அறிவித்த பணிகளில் 68 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதனை நிதியமைச்சரின் அறிக்கையில் இருந்தே அறிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்.
அம்மா உணவகங்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்கள் குறைக்கப்பட்டதால் உணவுகள் தரமின்றி உள்ளதாகவும், அங்கு பணியாற்றிய ஊழியர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறை கூறினார்.
தமிழகத்தில் எது கிடைக்கிறதோ இல்லையோ, கஞ்சா தாராளமாக கிடைப்பதாகவும், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், விழுப்புரம் கொலை சம்பவத்தை மேற்கோள்காட்டி, எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.