அதிமுகவில்
நடத்தும் சட்டப் போராட்டம் தொடர் கதையாகி இருக்கிறது. கடைசியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி டி.குமரேஷ் பாபு அளித்த தீர்ப்பில், ஜூலை 11 2022 அன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும். மேலும் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடையில்லை.
கட்சி விதி மீறல்
அதேசமயம் ஓபிஎஸ் நீக்கப்பட்டதில் 7 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்ற கட்சி விதி மீறப்பட்டுள்ளது. இருப்பினும் தடை உத்தரவு ஏதும் பிறப்பித்தால் கட்சியின் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கும் எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. இதனை எதிர்த்து ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகிய 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இரு நீதிபதிகள் அமர்வு
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷாஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால் தனி நீதிபதி உத்தரவின் நகல் கிடைக்கவில்லை என்று கூறி வழக்கு விசாரணை இன்று நடைபெறும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதிலும் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை மட்டும் பட்டியலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நாளைக்கு ஒத்திவைப்பு
இந்நிலையில் இன்று காலை வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்த போது அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட தொடங்கினார். அப்போது மற்ற மூவரும் இதே கோரிக்கையை முன்வைத்து தான் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
மொத்தம் 4 பேரின் மனுக்கள்
அவர்களது மனுக்களையும் ஏற்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதைக் கேட்ட நீதிபதிகள், ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரின் மனுக்களையும் ஒன்றாக சேர்த்து நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர். இவ்வாறு தொடர்ந்து இரண்டு நாட்கள் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடியின் அடுத்த நகர்வு
மறுபுறம் தனது தரப்பிற்கு சாதகமாக தீர்ப்பு வந்ததும் அதிமுக பொதுச் செயலாளராக
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி சான்றிதழும் அளிக்கப்பட்டு விட்டது. இனிமேல் நீதிமன்ற விசாரணையில் பொதுச் செயலாளர் என்ற வகையில் எடப்பாடி ஆஜராவார். இது அவருக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி தேர்தல் ஆணையத்திலும் கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இருப்பினும் மக்கள் மன்றத்தில் அளிக்கப்படும் தீர்ப்பே ஒரு நிலையான தலைவரை அதிமுகவிற்கு அளிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.