தேசிய விளையாட்டுச் சபையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுமாறு அர்ஜுன ரணதுங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஸ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால் எழுத்து மூலம் கோரப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பங்கேற்காத உறுப்பினர்கள்
நேற்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு சூம் தொழிநுட்பம் ஊடாக நடைபெறவிருந்த சபையின் கூட்டத்திற்கு, அதன் உறுப்பினர்கள் எவரும் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சபையின் உறுப்பினர்கள் அர்ஜுனவின் தலைமைப் பொறுப்பினை ஏற்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.