ஆந்திரா: ஆந்திராவில் பேருந்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய ரகளை செய்த நபரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். கர்னூல் மாவட்டம் பத்திகொண்டா காவல்நிலையம் அருகே ஒருவர் வெறி பிடித்தவர் போல் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தார். அந்த வழியாக சென்ற இரண்டு பேருந்துகளை வழிமறித்த அவர் கையில் வைத்திருந்த இரும்பு ராடால் கண்ணாடியை உடைத்ததோடு கார் கண்ணாடிகளையும் சேதப்படுத்தினார்.
தொடர்ந்து காவல் நிலையம் சென்று அங்கிருந்த இருக்கைகளையும் அடித்து நொறுக்கியிருக்கிறார். இதனை கண்டா சிலர் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர். சுதாரித்துக் கொண்ட போலீசார் உடனடியாக பொதுமக்கள் உதவியோடு அந்த நபரை பிடித்து சிறையில் அடைத்தனர். அதை தொடர்ந்து அந்த நபர் யார் எதற்காக வாகனங்களை அடித்து நொறுக்கினார். மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.