வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மெல்பர்ன், ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் வருவாய் துறை அமைச்சராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டேனியல் மூகே, 39, நேற்று பதவி ஏற்றார்.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வராக கிறிஸ் மின்ஸ் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இவரது அமைச்சரவையில் ஆறு பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் டேனியல் மூகே, வருவாய் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அமைச்சராக இதுவரை பதவி வகித்தது இல்லை.பிறப்பால் ஹிந்துவான டேனியல் மூகே, பதவி ஏற்பின் போது பகவத் கீதையின் மேல் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.டேனியல் மூகேவின் பெற்றோர், பஞ்சாபில் இருந்து 1973ல் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தனர்.பிளாக்டவுன் நகரில் பிறந்த மூகே, மூன்று பட்டங்கள் பெற்றுஉள்ளார்.
Advertisement