ஜியோ அதன் புதிய ஜியோ பைபர் பேக்கப் திட்டத்தை 198 ரூபாயில் ஜியோ அறிவித்துள்ளது. இந்த திட்டம் இன்று மார்ச் 30, 2023 முதல் கிடைக்கும். நெட்ஒர்க் சரியாக கிடைக்காத முக்கியமான நேரங்களில் இந்த பேக்கப் பிளான் என்பது முக்கிய உதவியாக இருக்கும்.
உங்கள் முதன்மை பிராட்பேண்ட் இணைப்பு செயலிழந்தால், நீங்கள் JioFiber இணைப்பைப் பயன்படுத்த வேண்டும் என்றால், 1 அல்லது 2 அல்லது 7 நாட்களுக்கு ஒரே கிளிக்கில் தேவைப்படும் வேகத்தை மேம்படுத்தி, பயன்படுத்த இத்திட்டம் அனுமதிக்கிறது. 30 Mbps அல்லது 100 Mbps ஆக வேகத்தை நீங்கள் அதிகரிக்கலாம். 1 நாள் 30 Mbps வேகத்தை பெற ரூ.21 என்றும், 100 Mbps வேகத்தை பெற ரூ.32 என்றும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல், 2 மற்றும் 7 நாட்களுக்கு 30 Mbps வேகத்தை பெற நீங்கள் முறையே ரூ.31 மற்றும் ரூ.101 செலவிட வேண்டும். இறுதியாக 2 மற்றும் 7 நாட்களுக்கு 100 Mbps வேகத்தை பெற நீங்கள் முறையே ரூ.52 மற்றும் ரூ.152 செலவிட வேண்டும். இத்துடன் உங்களுக்கு STB (செட்-டாப் பாக்ஸ்) நன்மையையும் மேம்படுத்திக்கொள்ள இந்த திட்டம் அனுமதிக்கிறது.