சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நாளை (31) நடைபெறவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையின் காரணமாக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
எனினும் முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையில் நாளை (31) காலை 6.30 மணிக்கு மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.