அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி பதவியேற்றுக் கொண்டார்.
நடிகர் அஜித்தின் தந்தை உடல்நலக்குறைவால் கடந்த வாரம் காலமானார். பலரும் நடிகர் அஜித்திற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியும் தொலைப்பேசி வாயிலாக நடிகர் அஜித்திற்கு இரங்கல் தெரிவித்தார். அதிமுக பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தனது வாழ்த்துகளையும் நடிகர் அஜித் தெரிவித்து கொண்டுள்ளார்