இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு இறுதியில் கார் விபத்தில் சிக்கினார். அவர் ஓட்டிச் சென்ற கார் சாலையின் தடுப்பில் மோதி தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக அவர் காயத்துடன் உயிர் தப்பினார்.
இதனை தொடர்ந்து பல அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டு தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். அவரது உடல்நிலை முன்னேறி வந்தாலும், கிரிக்கெட் விளையாடுவதற்கு பல மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் அவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து எந்த வித கிரிக்கெட்டும் ஆடாமல் இருந்து வருகிறார். மேலும், ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகி உள்ளார்.அவருக்கு பதிலாக டேவிட் வார்னர் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக அணியில் விக்கெட் கீப்பர் பணிகளை யார் மேற்கொள்வார் என்ற கேள்வி எழுந்தது. இதைத்தொடர்ந்து தற்போது அந்த இடத்தை அபிஷேக் போரல் நிரப்புகிறார். 25 வயதாகும் போரல், முதல் தர கிரிக்கெட்டில் கடைசியாக விளையாடிய 26 இன்னிங்சில் 6 முறை அரைசதம் விளாசி பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணியில் காமடைந்திருக்கும் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்க்கு பதிலாக பெங்கால் இளம் வீரர் அபிஷேக் போரல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ள அபிஷேக் போரல், அணியின் பயிற்சி போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
பெங்கால் உள்ளூர் கிரிக்கெட் சிறப்பான கீப்பிங் மற்றும் பேட்டிங் மூலம் நன்கு கவனம் ஈர்த்த போரலை, இந்த சீசன் முழுவதும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறக்க டெல்லி அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி அணி தனது முதல் போட்டியில் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை ஏப்ரல் 1-ம் தேதி எதிர்கொள்கிறது.