ஓரிரு வருடங்களில் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாடு மீண்டெழும் – கடற்றொழில் அமைச்சர்

ஓரிரு வருடங்களில் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாடு மீண்டெழும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டை மீட்டெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்கள் வெற்றியடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

சகலருக்கும் சமமான கல்வி எனும் சிந்தனைக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு முழுவதிலும் மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கான இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வு நேற்று (29) முழங்காவில் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் பிரதம விருத்தினராக கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் மாணவர்களுக்கான சீருடைகளையும் பாடநூல்களையும் வழங்கினார்.

இந்த தேசிய நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு மகிழ்ச்சியடைவதுடன் இதற்கு காரணமாக இருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.