புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ரங்கசாமி பதிலளித்து பேசுகையில், ‘நாட்டுக்காகவும், மாநிலத்துக்காகவும், மொழிக்காகவும் பாடுபட்டு மறைந்த தலைவர்களுக்கு அரசு விழா எடுக்கப்படும். அதன்படி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா, புதுச்சேரி விடுதலைக்காக பாடுபட்ட செல்லான் நாயகர் ஆகியோருக்கு அரசு சார்பில் விழா எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.