சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவுக்கு ஏப்.6-ம் தேதி வரை விடுமுறை என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரி இன்று முதல் ஏப்.-ம் தேதி வரை மூடப்படுவதாக முதல்வர் பாக்கல ராமதாஸ் அறிவித்துள்ளார். விடுதியில் தங்கியுள்ள மாணவிகளும் வெளியேற வேண்டும் என லாஷேத்ரா முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மார்ச் 30லிருந்து ஏப்.6-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.6-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் கலாஷேத்ராவை விட்டு வெளியேற மறுத்து மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேறினாலும் வெளியே எங்களின் போராட்டம் தொடரும் என மாணவிகள் தெரிவித்துள்ளனர்.