இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் நடிகர் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக கைகோத்துள்ளார்.’கேப்டன் மில்லர்’ திரைப்படம் 1930-40 களில் நடக்கும் கதை எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்காக தென்காசி மாவட்டத்தின் வனப்பகுதியில் ஒரு செட் அமைத்துள்ளனர்.
இந்த பீரியடிக் த்ரில்லர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.
இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் மற்றும் குண்டுவெடிப்புகளுடன் படக்குழு பெரிய அளவில் காட்சியை பதிவு செய்து வருகிறது.
இந்நிலையில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.