மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் படேல் நகரில் உள்ள கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநவமி கொண்டாட்டத்தின் போது பலேஸ்வர் மகாதேவ் கோயிலில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்தனர். இந்நிலையில் படிக்கிணற்றில் வழிபாடு நடத்திய போது படிக்கட்டுகள் எதிர்பாரத விதமாக திடீரென மளமளவென சரிந்து கீழே விழுந்தன.
இதையடுத்து படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர். இந்த விபத்தில் 13 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களில் 19 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ராம நவமி கொண்டாட்டத்தின் போது இந்த கோர விபத்து ஏற்பட்டது.
பிற பக்தர்களும், மீட்புக்குழுவினரும் துரிதமாகச் செயல்பட்டு இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட பக்தர்களை மீட்டனர். பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தூரில் நடந்த விபத்தால் மிகவும் வேதனை அடைந்தேன். மாநில அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
newstm.in