சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் தனது மொபைல் போனில் ஆபாச படம் பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வடக்கு திரிபுராவை சேர்ந்த ஜதப் லால் நாத் என்பவர் பக்பசா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராகியுள்ளார். இவர் சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் போது மும்முரமாக தனது செல்போனில் ஆபாச படம் பார்த்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேரவையில் சக உறுப்பினர்கள் சூழ்ந்திருக்க, மடியில் செல்போனை வைத்து ஆபாச படம் பார்க்கும் ஜதப் லால், பின்னர் மேஜை மீதே செல்போனை வைத்து ஆபாச படங்களை ரசித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது சபை நிகழ்ச்சிகளையும் கவனிக்கிறார்.
பாஜக எம்.எல்.ஏ ஆபாச படம் பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, திரிபுரா பாஜக தலைவர் ராஜிப் பட்டாச்சாரியா, இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக கர்நாடக உட்பட பாஜகவை சேர்ந்த பல்வேறு எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்ததான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்நிலையில், தற்போது ஜதப் லால் நாத் ஆபாச படம் பார்த்திருப்பது நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.
newstm.in