சார்லஸ் மன்னரின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது: மருத்துவர்கள் மீண்டும் எச்சரிக்கை


சார்லஸ் மன்னரின் விரல்கள் வீங்கிய நிலையில் காணப்படுவது மீண்டும் விவாதத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நிபுணர்கள் கவலை

மன்னர் சார்லஸ் தற்போது அரசுமுறை பயணமாக ஜேர்மனி சென்றுள்ளார். இந்த நிலையிலேயே, வெளியான புகைப்படங்களை குறிப்பிட்டு, நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சார்லஸ் மன்னரின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது: மருத்துவர்கள் மீண்டும் எச்சரிக்கை | King Charles Sausage Fingers Got Worse Doctor Says

@getty

மருத்துவர் ஒருவர் தெரிவிக்கையில், மன்னரின் நிலை மாறிவிட்டதாக நினைக்கவில்லை, ஆனால், அது மோசமாகிவிட்டது போல் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, மன்னரின் வீங்கிய விரல்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்த மருத்துவர் Gareth Nye, மன்னரின் நிலை தற்போது மிகவும் மோசமடைந்துள்ளதாக எச்சரித்துள்ளார்.

பொதுவாக மன்னர் சார்லஸ் நீளாமன விரல்கள் கொண்டவர் எனவும், சமீப காலமாக சார்லஸ் oedema என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் எனவும் மருத்துவர் Gareth Nye குறிப்பிட்டிருந்தார்.

சார்லஸ் மன்னரின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது: மருத்துவர்கள் மீண்டும் எச்சரிக்கை | King Charles Sausage Fingers Got Worse Doctor Says

@getty

மட்டுமின்றி, அவரது விரல்கள் தொடர்ந்து வீங்கியே காணப்படுவது என்பது, அவரது நிலை மிகவும் மோசமடைந்துள்ளது என்பதையே காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

காலப்போக்கில் மோசமாகிவிடும்

மேலும், oedema பாதிப்பால் விரல்களில் வீக்கம் காணப்படும், ஆனால் அது தொடர்ந்து காணப்படுவது என்பது Arthritis பாதிப்பாக இருக்க வாய்ப்புள்ளது எனவும்,
60 வயது கடந்த மக்களில், இந்த நிலை காணப்படுவதாகவும் மருத்துவர் Gareth Nye விளக்கமளித்துள்ளார்.

சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் நிலைமைக்கு உதவக்கூடும் என்றாலும், இறுதியில் அது காலப்போக்கில் மோசமாகிவிடும் என்றார்.
வீங்கிய விரல்கள் தொடர்பில் கண்டிப்பாக மன்னர் சார்லஸ் சிகிச்சை முன்னெடுத்து வரலாம்.

சார்லஸ் மன்னரின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது: மருத்துவர்கள் மீண்டும் எச்சரிக்கை | King Charles Sausage Fingers Got Worse Doctor Says

@getty

மேலும், இந்த பாதிப்பு தொடர்பில் அவர் ஏற்கனவே முழுமையாக தெரிந்து கொண்டிருப்பார் என்றே நம்புவதாகவும் மருத்துவர் Gareth Nye குறிப்பிட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.