சென்னை : நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் பத்து தல படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.
இந்தப் படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னதாக மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்துள்ள சிம்பு, இந்தப் படத்தின்மூலம் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சிம்புவின் திருமணம்தான் தற்போது ஹாட் டாப்பிக்காகியுள்ளது. பலரும் இந்தக் கேள்வியையே திரும்ப திரும்ப கேட்டு வருகின்றனர்.
சிம்புவின் பத்து தல படம்
நடிகர் சிம்பு, கவுதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. முன்னதாக சிம்புவின் நடிப்பில் மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்தது. இதையடுத்து தற்போது வெளியாகியுள்ள பத்து தல படத்தின்மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் தற்போது சிம்புவிற்கு சிறப்பாக கைக்கொடுத்து ஹாட்ரிக் வெற்றியாக மாறியுள்ளது.
கேங்ஸ்டராக நடித்துள்ள சிம்பு
வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து இந்தப் படத்திலும் சிம்பு கேங்ஸ்டராக நடித்துள்ள நிலையில், படத்தை நெடுஞ்சாலை, சில்லுன்னு ஒரு காதல் படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கியுள்ளார். படத்திற்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்து வருகின்றனர். இதனிடையே இந்தப் படமும் அவரது கடந்த படங்களை போலவே 100 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கன்னடத்தில் கடந்த 2017ம் ஆண்டில் வெளியான முஃப்தி என்ற படத்தின் ரீமேக்காக இந்தப் படம் தற்போது உருவாகியுள்ளது.
பத்து தல படத்தின் கதைக்களம்
இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. கன்னியாகுமரியில் மணல் கொள்ளையில் ஈடுபடும் மிகப்பெரிய தாதாவாக ஏஜிஆர் என்ற கேரக்டரில் சிம்பு நடித்துள்ளார். காணாமல் போன முதலமைச்சரை கண்டுபிடிக்கும் அண்டர் கவர் போலீசாக நடித்துள்ள கௌதம் கார்த்திக், இந்த சம்பவத்திற்கு காரணமாக சிம்பு இருக்கலாம் என்று சந்தேகித்து அவரிடம் அடியாளாக சேர்ந்து உண்மையை கண்டுபிடிப்பதாக இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.
சிறப்பான சிம்பு நடிப்பு
இந்தப் படத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக்கின் நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் கவுதம் மேனனின் கேரக்டர் வலுவில்லாமல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல ஏஆர் ரஹ்மான் இசையில் படத்தின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் உள்ளிட்டவை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் சிம்புவின் கேரியரில் இந்தப்படம் சிறப்பாக அமையும் என்று விமர்சகர்கள் கணித்துள்ளனர்.
திருமணம் குறித்து சிம்புவின் அம்மா
இந்தப் படத்தை பார்த்த சிம்புவின் அம்மாவிடம் அவரது திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து பேசிய அவர் ஏன் எப்போதும் இந்தக் கேள்வியையே கேட்கிறீர்கள் என்று பதில் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அவரிடம், தன்னுடைய அம்மாதான், தனக்கு பெண் பார்க்க வேண்டும் என்று சிம்பு கூறியதை தெரிவித்து கேள்வி எழுப்பிய நிலையில், அப்படியா, பார்த்துவிட்டால் போகிறது என்று அவர் பதிலளித்துள்ளார்.