”எல்லாப் புகழும் இறைவனுக்கே!” – ஆனந்த விகடனின் 2 விருதுகளுடன் ஏ.ஆர்.ரஹ்மான்!
சிறந்த படக்குழுவுக்கான விருது!
ஜெயிலர் அப்டேட்!
“விகடனின் முதல் விருது விழா நிகழ்ச்சியை நான்தான் இயக்கியிருந்தேன். இப்போது அதே மேடையில் விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி. `ஜெயிலர்’ திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சாரின் காட்சிகள் அனைத்தும் இன்றோடு நிறைவடைந்தது” – இயக்குநர் நெல்சன்
சூர்யாவுடன் விரைவில் ஒரு படம் – லோகேஷ் கனகராஜ்!
“ `விக்ரம்’ படத்துக்காக சூர்யா சாருடன் இரண்டு நாள்கள் மட்டுமே வேலை பார்த்தேன். அவருடன் 150 நாள்களுக்கு முழுமையாக இன்னொரு படம் செய்ய வேண்டும். அது விரைவில் நடக்கும்.’’ – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
சிறந்த என்டர்டெயினர் – லோகேஷ் கனகராஜ்!
2022-ம் ஆண்டுக்கான சிறந்த என்டர்டெயினருக்கான விருது… நடிகர் சூர்யா வழங்க, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெற்றுக்கொண்டார்!
சிறந்த குணச்சித்திர நடிகை – ஊர்வசி!
“முந்தானை முடிச்சு’ படத்துக்கு விகடன் கொடுத்த மதிப்பெண்ணும் விமர்சனும்தான் அந்தப் படத்துக்கே விளம்பரமாக அமைந்தது.’’ – சிறந்த குணச்சித்திர நடிகை விருது பெற்ற நடிகை ஊர்வசி!
சிறந்த படம் ஜெய்பீம் – நீதிபதி சந்துரு விருது வழங்கினார்!
2020-21-ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான விருது…மேனாள் நீதிபதி சந்துரு வழங்க, ‘ஜெய் பீம்’ திரைப்படத்துக்காக அந்தப் படக்குழு பெற்றுக்கொண்டது.
“எங்கள் குழுவை நம்பி அந்த வழக்கு பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்ட சந்துரு சாருக்கு நன்றி!’’ – நடிகர் சூர்யா
“ `ஜெய் பீம்’ ஒரு கூட்டுக் கனவு. இந்தக் குழுவிலிருக்கும் ஒவ்வொரு நபரும், என்னுடைய கனவை அவர்களுடைய கனவாக மாற்றிக்கொண்டு உழைத்தார்கள். இந்த மேடையில் நாங்கள் எடுக்கும் இந்தக் குழுப் படத்தை என்னுடைய வீட்டில் மாட்டிவைப்பேன்.’’ – இயக்குநர் த.செ.ஞானவேல்
“நான் வாங்கும் முதல் விகடன் அவார்ட்” – சிவகார்த்திகேயன்!
2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த என்டர்டெயினருக்கான விருதை இயக்குநர் ஷங்கர் வழங்க, சிவகார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்
“நான் வாங்கும் முதல் விகடன் அவார்ட் இதுதான். `டாக்டர்’ படத்துக்கு முன்பாக நான் நடித்த ஒரு படம் விமர்சனரீதியாக பலத்த அடி வாங்கியது. அப்போதுதான் ஏதாவது புதிதாக முயற்சி செய்யலாம் என இயக்குநர் நெல்சனை அழைத்தேன். நெல்சனின் விருப்பப்படி படத்தை இயக்கச்சொல்லி தயாரிப்பாளராக ஒத்துழைப்பு கொடுத்தேன். `டாக்டர்’ மாதிரியான பரிசோதனை முயற்சி வசூலையும் பெற்று, விகடனில் நான்கு விருதுகளையும் வென்றிருப்பது பெரும் ஊக்கமளிக்கிறது.’’ – நடிகர் சிவகார்த்திகேயன்!
இந்தியா டிரெண்டிங்கில் ஆனந்த விகடன் சினிமா விருதுகள்!
தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் ஒரே மேடையில் சங்கமித்திருக்கும் பிரமாண்ட நிகழ்வாக ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நடந்துகொண்டிருக்கிறது.
இந்த நிகழ்வு ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகிவருகிறது.
`இந்தியன் – 2’ அப்டேட்:
“அனிருத்திடம் ஒரு குட்டிப் பாடல் கேட்டிருக்கிறேன். அது ரெடியானவுடன், `இந்தியன் 2’ ஸ்பெஷல் வீடியோ வெளியாகும்.’’ – இயக்குநர் ஷங்கர்.
நெகிழவைத்த சூர்யா!
“ `ஜெய் பீம்’ படத்துக்காக விருதுபெற்ற பிறகு நடிகர் மணிகண்டனை மேடைக்கு அழைத்து, விருதைப் பகிர்ந்துக்கொண்டார், நடிகர் சூர்யா.
மேடையில் நடிகர் சூர்யாவுக்கும், நடிகர் மணிகண்டனுக்கும் முத்தம் கொடுத்தார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம், பாடலாசிரியர் விவேக் கலந்துரையாடல்!
கமல்ஹாஸனுடன் நடிக்க வேண்டும் என்பது என் தவம்! – சூர்யா!
“கமல்ஹாசன் அவர்களோடு இணைந்து நடிக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் தவம். `விக்ரம்’ படம் வெளியாகி, இத்தனை நாள்கள் கடந்தும், அதற்கான வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது.” – ரோலக்ஸ் சூர்யா
சிறந்த நடிகர் 2022 – உலக நாயகன்!
2022 ம் ஆண்டுக்கான சிறந்த நடிக்காருக்கான விருது…ஏ. ஆர். ரஹ்மான், மணி ரத்னம் வழங்க ‘விக்ரம்’ படத்திற்காக கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார்!
2022-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதைப் பெற்ற பிறகு, இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நடிகர்களின் பெயரைக் கூறி அவர்களுடன் இந்த விருதைப் பகிர்ந்துகொள்வதாகக் கூறினார், கமல்ஹாசன்.
சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்!
2022-ம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருதை பி.சி.ஸ்ரீராம் வழங்க, `கோப்ரா’, `பொன்னியின் செல்வன்’, `வெந்து தணிந்தது காடு’ படங்களுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுக்கொண்டார்.
இந்தியன் 2 அப்டேட்!
இந்தியன் 2 படத்தில் பல தொழில்நுட்பங்கள் இணையவிருக்குறது. விரைவில் வெளிவரும். நானும் ஆர்வமாக இருக்கிறேன். நீங்களும் அதை காண வேண்டும் என்று ஆர்வமா இருக்கிறேன் – கமல்ஹாசன்!
வாழ்நாள் சாதனையாளர் இயக்குநர் மணிரத்னம்!
‘எஸ்.எஸ்.வாசன் வாழ்நாள் சாதனையாளர் விருதை’ கமல்ஹாசன் வழங்க, இயக்குநர் மணி ரத்னம் பெற்றுக்கொண்டார்.
“விகடன்ல மார்க்கே கொடுக்க மாட்டாங்க. 40-45-க்கு மேல கொடுக்கவே மாட்டேங்குறாங்க. விமர்சனக்குழுவில் யாரும் 50-க்கு மேல கத்துக்கவே இல்லைபோல!
நன்றாக படிக்கிறவர்களுக்கு இந்த கோபம் இருக்கும். எனக்கு இல்லை – கமல் ஹாசன்!
உயிரே, உறவே, தமிழே..! – கமல் ஹாசன்!
“உயிரே, உறவே, தமிழே… நான் சினிமாவின் குழந்தை. வீட்டின் வாசலில் நின்று, வாசன் அவர்களைச் சந்திக்க முடியுமா என்று ஆசைப்பட்டிருக்கிறேன். இந்த விருதைக் கொடுக்கும்போது, பெருமையைவிட பணிவுதான் அதிகமாக இருக்கிறது. `இந்தப் புகழ் என்பதை நம்முடையதல்ல’ என்று நினைக்க வேண்டும், `என்னுடையது’ என்று நினைத்தால் இங்கு வேலை எதுவும் நடக்காது.’’ – கமல்ஹாசன்
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் 2022!
2022 – ம் ஆண்டுக்கான சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்திற்கான விருதை இயக்குனர் சசி வழங்க ‘லவ் டுடே’ படத்திற்காக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பெற்றுக்கொண்டார்.
”நடந்தது நன்றாகவே நடந்தது”!
“நடந்தது நன்றாகவே நடந்தது. என் உணர்வை அநியாயமாக (!) எடுத்துக்கொண்டு விகடன் என்னை அழைத்ததில் மகிழ்ச்சி. எப்போதும் விகடனிடமிருந்து நான் விருது பெற மாட்டேன். ஆனால், விகடனுக்கும் எனக்குமான இந்த மரியாதை தொடரும்.’’ – இயக்குநர் இரா.பார்த்திபன்
“சிறந்த இயக்குநர் விருது வாங்குவேன்!” – பி.சி.ஸ்ரீராம் எக்ஸ்க்ளூசிவ்
“அடுத்த முறை நிச்சயம் நான் விகடன் விருது வாங்குவேன்னு மூணு வருஷத்துக்கு முன்னாடி இதே மேடையில சொன்னேன். ஆனா கோவிட் / லாக்டெளன் வந்துருச்சு. தமிழைவிட தெலுங்கில் அதிக படங்களில் பணியாற்றுகிறேன். விகடன் தெலுங்கிலும் வந்தால் நல்லாயிருக்கும். ஆனா, நிச்சயம் தமிழ்ப் படத்துக்காக அடுத்த வருடம் நிச்சயம் விகடன் விருது வெல்வேன். அது சிறந்த ஒளிப்பதிவுக்காகவும் இருக்கலாம்… சிறந்த இயக்கத்துக்காகவும் இருக்கலாம்!”
சிறந்த நடிகை 2020-21!
2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான விருது… நடிகை மீனா வழங்க, ‘ஜெய் பீம்’ திரைப்படத்துக்காக லிஜோமோல் ஜோஸ் பெற்றுக்கொண்டார்.
சிறந்த திரைக்கதை 2022!
2022-ம் ஆண்டுக்கான சிறந்த திரைக்கதைக்கான விருது… நடிகர் விக்ரம் பிரபு வழங்க, ‘கார்கி’ திரைப்படத்துக்காக ஹரிஹரன் ராஜு, கெளதம் ராமசந்திரன் இருவரும் பெற்றுக்கொண்டனர்.
காவல்துறையினர் நடந்துகொள்ளும் விதம் பற்றி எனக்கு கூறியது தமிழ்தான்!
` `விசாரணை’, `வடசென்னை’, `விடுதலை’ திரைப்படங்களில் காவல்துறையினர் தொடர்பான காட்சிகளில், அவர்கள் நடந்துகொள்ளும்விதம் பற்றி எனக்குக் கூறியது இயக்குநர் தமிழ்தான்.’’ – இயக்குநர் வெற்றி மாறன்.
விகடன் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது – இயக்குநர் த.செ.ஞானவேல்!
“மாணவ நிருபராக விகடனுக்குள் வந்தேன். விகடன் ஒரு கல்லூரி மாதிரி பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்து அனுப்பியது. `நீ காசு வாங்கிட்டு எழுதக் கூடாது’. விகடன் எனக்குக் கற்றுக்கொடுத்த முதல் பாடம் அதுதான். `ஜெய் பீம்’ படத்தில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் நான் விகடனில் இருந்தபோதுதான் சந்தித்தேன்.’’ – இயக்குநர் த.செ.ஞானவேல்!
சிறந்த இயக்குநர் த.செ.ஞானவேல்!
2020-21-ம் ஆண்டின் சிறந்த இயக்குநருக்கான விருது… இயக்குநர் வெற்றிமாறன் வழங்க, ‘ஜெய் பீம்’ படத்துக்காக த.செ.ஞானவேல் பெற்றுக்கொண்டார்.
வாடிவாசல் எப்போது – இயக்குநர் வெற்றி மாறன் பதில்!
நான் `விடுதலை’யை முழுமையாக முடிக்க வேண்டும். சூர்யா சார் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தை முடிக்க வேண்டும். இரண்டும் முடிந்துவிட்டால் `வாடிவாசல்’தான்! – வெற்றிமாறன்
வெங்கட் பிரபுவிடம் நடிகர் விஜய் கேட்ட கேள்வி!
“ `சென்னை – 600 028’ திரைப்படத்துக்காக விகடன் சிறந்த திரைக்கதை விருதை எனக்குக் கொடுத்தது. இப்போது மீண்டும் 15 வருடங்கள் கழித்து, சிறந்த திரைக்கதை விருது கிடைத்திருக்கிறது.’’ – வெங்கட் பிரபு
“இந்த கதைய நீ யோசிச்ச சரி , எப்படி இத படமா எடுத்த ” – மாநாடு குறித்து நடிகர் விஜய் வெங்கட் பிரபுவிடம் கூறியது.
`தனி ஒருவன் – 2’ அப்டேட்:
2024-ல் `தனி ஒருவன் – 2’ – ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் அப்டேட் கொடுத்த இயக்குநர் மோகன் ராஜா!
‘வாடிவாசல்’ அப்டேட்!
”தம்பி சூர்யா, இயக்குநர் வெற்றிமாறன் படைப்பில் உலகத் தமிழர்களுக்கு ஒரு விடியல், ‘வாடிவாசல்.’ இந்த வருடத்திலேயே ரசிகர்களின் எண்ணம் நிறைவேறும். உலகத் தமிழர்கள் அனைவரும் உச்சி முகரும் படைப்பாக ‘வாடிவாசல்’ அமையும். – தயாரிப்பாளர் தாணு
சிறந்த பாடலாசிரியர் விவேக்!
2022-ம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் விருது…இயக்குநர் வெங்கட் பிரபு வழங்க, ‘குலு குலு’ திரைப்படத்தின் ‘அன்பரே’ பாடலுக்கும், `கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் ‘சண்ட வீரச்சி’ பாடலுக்கும் பாடலாசிரியர் விவேக் பெற்றுக்கொண்டார்.
உதயநிதி இல்லை என்றால் ’மாமன்னன்’ இல்லை – மாரி செல்வராஜ்!
”தமிழ் சினிமாவில் எடுக்க முடியாத ஒரு கதைக்கருவைக் கொண்டது ’மாமன்னன்’ படம். உதயநிதி ஸ்டாலின் இல்லையென்றால் இப்படியொரு படத்தை தமிழ் சினிமாவில் எடுத்திருக்க முடியாது” – இயக்குநர் மாரி செல்வராஜ்!
ஹைக்கூ கொடுத்த நம்பிக்கை! – இயக்குநர் லிங்குசாமி!
“முதல் முதலா என்னோட ஹைக்கூ கவிதை ஒண்ணு விகடன்ல வெளியாச்சு. அந்த நம்பிக்கையிலதான் சென்னைக்கே புறப்பட்டு வந்தேன்.’’
– இயக்குநர் லிங்குசாமி
மயில்சாமி சாருக்கு விருதை சமர்ப்பிக்கிறேன்! – தமிழரசன் பச்சமுத்து!
2022-ம் ஆண்டுக்கான சிறந்த வசனத்துக்கான விருது… இயக்குநர் லிங்குசாமி வழங்க, ‘நெஞ்சுக்கு நீதி’ படத்துக்காக தமிழரசன் பச்சமுத்து பெற்றுக்கொண்டார்.
“மயில்சாமி சார் வசனம் பேசினவிதத்தைப் பார்த்தவுடன்தான் எனக்கே ஒரு நம்பிக்கை ஏற்பட்டுச்சு. இந்த விருதை மயில்சாமி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்.’’ – தமிழரசன் பச்சமுத்து!
மணி ரத்னம் சார்தான் என் குரு – ஆடை வடிவமைப்பாளர் ஏகா லக்கானி!
”கிடாக்குழி என் ஊரு எனக்கு மாரியம்மான்னு பேரு”
சிறந்த அறிமுக நடிகை 2020-21 – அபர்ணதி!
”மல்லிப்பூ வச்சு வாடுதே…”
2022-ம் ஆண்டுக்கான சிறந்த பின்னணி பாடகி விருது… கவிஞர் தாமரை வழங்க, ‘மல்லிப்பூ’ பாடலுக்காக மதுஸ்ரீ பெற்றுக்கொண்டார்!
சிறந்த பின்னணிப் பாடகி – கிடாக்குழி மாரியம்மாள்!
2020 -21-ம் ஆண்டுக்கான சிறந்த பின்னணிப் பாடகி விருது…சின்னத்திரை நடிகை ரச்சிதா வழங்க, ‘கர்ணன்’ திரைப்படத்தின் ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடலுக்காக கிடாக்குழி மாரியம்மாள் பெற்றுக்கொண்டார்.
தாமரைக்கு விருது வழங்கிய கிருத்திகா உதயநிதி!
2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் விருது…கிருத்திகா உதயநிதி வழங்க, ‘மாறா’ திரைப்படத்துக்காக எழுதிய ‘யார் அழைப்பது…’ பாடலுக்காக கவிஞர் தாமரை பெற்றுக்கொண்டார்.
Exclusive: ”பையா 2-வுக்கு நான் ரெடி!”- லிங்குசாமி!
” ’பையா 2’ படத்துக்கு நான் ரெடி. மே மாதம் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம்.” – ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் இயக்குநர் லிங்குசாமி!
10 தேசிய விருதுகளுக்குச் சமம்! – அபர்ணதி!
2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த அறிமுக நடிகை விருதை கிருத்திகா உதயநிதி வழங்க, ‘தேன்’ திரைப்படத்தில் நடித்ததற்காக அபர்ணதி பெற்றுக்கொண்டார்.
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் கிருத்திகா உதயநிதி!
விகடன் விருது பெற்றதில் பெருமிதம் கொள்கிறேன் – படத்தொகுப்பாளர் பிரவீன் ட்வீட்!
‘விலங்கு-2’ இன்னும் சிறப்பா இருக்க இது பெரிய ஊக்கம் தந்திருக்கு! – விமல்
“எங்க கொண்டுவந்து நிறுத்தியிருக்கே பாத்தியா?” – மீம் கேம் With Celebrities!
2022-க்கான சிறந்த குணச்சித்திர நடிகை கீதா கைலாசம்!
2022-ம் ஆண்டுக்கான சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது… கலை இயக்குநர் தோட்டாதரணியிடமிருந்து ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்காக கீதா கைலாசம் பெற்றுக்கொண்டார்!
சோழ தேசத்தை திரையில் கட்டமைத்த கலைஞர்!
2022 -ம் ஆண்டின் சிறந்த கலை இயக்குநருக்கான விருது… பழம்பெரும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடமிருந்து, `பொன்னியின் செல்வன்’ படத்துக்காக தோட்டா தரணி பெற்றுக்கொண்டார்.
சிறந்த குணச்சித்திர நடிகர் 2022 – காளி வெங்கட்!
2022-ம் ஆண்டின் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது… பழம்பெரும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடமிருந்து, `கார்கி’ படத்துக்காக காளி வெங்கட் பெற்றுக்கொண்டார்.
என் காதல் சக்சஸ் ஆகிடுச்சு! – கலை இயக்குநர் த.இராமலிங்கம்
2020-21-ம் ஆண்டின் சிறந்த கலை இயக்கத்துக்கான விருது… தயாரிப்பாளர் தியாகராஜன் வழங்க, ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்துக்காக த.இராமலிங்கம் பெற்றுக்கொண்டார்.
“ ‘காலா’, ‘கபாலி’ திரைப்படத்துக்காக விகடன் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன் . நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இப்போது கிடைத்திருக்கிறது. ஒருதலையாக காதலித்த பெண் இப்போது பதில் சொன்னதுபோல் இருக்கிறது.’’ – கலை இயக்குநர் த.இராமலிங்கம்.
`கேப்டன் மில்லர்’ அப்டேட்!
“70% படப்பிடிப்பு தென்காசியில் நடக்கிறது. இதற்காக பெரிய செட் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த பகுதியில் படப்பிடிப்பு முடிந்துவிடும். பிறகு சென்னையிலும் ஊட்டியிலும் படப்பிடிப்பு தொடரும்.’’ – தயாரிப்பாளர் `சத்யஜோதி’ தியாகராஜன்.
சிறந்த ஒளிப்பதிவாளர் – ரவி வர்மன்!
2022-ம் ஆண்டுக்கான சிறந்த ஒளிப்பதிவு விருது… ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் வழங்க ‘ பொன்னியின் செல்வன்’ திரைப்படத்துக்காக ரவி வர்மன் பெற்றுக்கொண்டார்.
Red Carpet Exclusive Interview
லியோ அப்டேட்..!
2020-21-ம் ஆண்டின் சிறந்த நடன இயக்கத்துக்கான விருது… தயாரிப்பாளர் தனஞ்செயன் வழங்க, ‘மாஸ்டர்’ திரைப்படத்துக்காக நடன இயக்குநர் தினேஷ் பெற்றுக்கொண்டார்.
`விகடன் விருது வழங்கும் விழா’ மேடையில், ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய நடன இயக்குநர் தினேஷ்.
லியோ அப்டேட்:
“காஷ்மீர் பகுதியில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். ஏப்ரல் மாதம் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.’’ – நடன இயக்குநர் தினேஷ்
`தங்கலான்’ அப்டேட்!
“KGF-ல், `தங்கலான்’ படம் பிரமாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. ஓய்வே இல்லாமல் இயக்குநர் பா.இரஞ்சித் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார். ஸ்டூடியோ கிரீனின் அடுத்த ரிலீஸ், `தங்கலான்’தான்.’’ – தயாரிப்பாளர் தனஞ்செயன்
“சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு…”
`தாஜ்மஹால்’ படத்தின் ‘அடி நீ எங்கே…’ பாடலை ஸ்ரீனிவாஸ் மேடையில் பாட, அரங்கமே நாஸ்டால்ஜியா உணர்வில் திளைத்தது…
”அடியே நீதானே…”
2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை பாடகர் ஸ்ரீனிவாசனிடமிருந்து, `பேச்சுலர்’ படத்தின் ‘அடியே நீதானே’ பாடலுக்காக கபில் கபிலன் பெற்றுக்கொண்டார்.
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் 2022 – ஏகா லக்கானி!
2022-ம் ஆண்டுக்கான சிறந்த ஆடை வடிவமைப்பு விருதை, ஆடை வடிவமைப்பாளர் அனுவர்தன் வழங்க `பொன்னியின் செல்வன்’ திரைப்படத்துக்காக ஏகா லக்கானி பெற்றுக்கொண்டார்!
”நெசவாளர்களுக்கு விருதை அர்ப்பணிக்கிறேன்!” – ஏகன் ஏகாம்பரம்
2020-21… சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை ஆடை வடிவமைப்பாளர் அனு வர்தன் வழங்க ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்துக்காக ஏகன் ஏகாம்பரம் பெற்றுக்கொண்டார்!
”நான் நெசவாளர் குடும்பத்தில் இருந்து வந்தவன். இந்த விகடன் விருதை நெசவாளர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்!” – ஏகன் ஏகாம்பரம்!
சிறந்த குழந்த நட்சட்திரம் 2020 – 21
2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதை நடிகர் விமல் வழங்க, ‘மண்டேலா’ திரைப்படத்துக்காக முகேஷ் பெற்றுக்கொண்டார்.
’கிச்சான்னாலே’ கலக்கல்தான் – `விலங்கு’ வெப் சீரீஸ் குழுவினர்!
2022-க்கான சிறந்த வெப் சீரீஸ் விருதை இயக்குநர் எழில் வழங்க, ‘விலங்கு’ வெப் சீரீஸுக்காக படக்குழு பெற்றுக்கொண்டது.
`விலங்கு’ வெப் சீரீஸ் எங்கள் அனைவருக்கும் ஒரு மறுபிறவி – நடிகர் விமல்!
`ஐந்து வருடங்களுக்கு முன்பு என்னுடைய `புருஸ் லீ’ திரைப்படம் வெளியானது. ஆனந்த விகடன் விமர்சனதுக்காக ஆர்வமாகக் காத்திருந்தேன். ஆனால், அந்தத் திரைப்படத்துக்கு விகடன் விமர்சனம் எழுதவில்லை. விகடனில் 48 மதிப்பெண் பெற வேண்டும் என்று ‘விலங்கு’ வெப் சீரீஸில் ஆர்வமாக உழைத்தேன். இப்போது அதை வாங்கிவிட்டேன் என்று நினைக்கிறேன்.’’ – புன்னகையுடன் இயக்குர் பிரஷாந்த் பாண்டியராஜ்.
சிறந்த வெப் சீரீஸ் – நவம்பர் ஸ்டோரி!
2020-21-க்கான சிறந்த வெப் சீரீஸ் விருதை, இயக்குநர் எழில் வழங்க ‘நவம்பர் ஸ்டோரி ‘ வெப் சீரீஸுக்காக இயக்குநர் இந்திரா சுப்ரமணியம் பெற்றுக்கொண்டார்.
Sema Vibe-ல் குடும்பத்தினருடன் குழந்தை நடசத்திரம் ஹியா தவே
”57 ஆண்டுகள் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்!”
2020-21… சிறந்த ஓப்பனைக்கான விருதை `சார்பட்டா பரம்பரை’ படத்துக்காக தசரதன் பெற்றார். நடிகை ரம்யா பாண்டியன் அவருக்கு விருதை வழங்கினார்.
”57 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கிறேன். இப்போது விகடன் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.” – தசரதன் நெகிழ்ச்சி
சினிமா விருதுகள் விழாவில் நடிகை ரோகிணி!
சிறந்த ஒப்பனைக் கலைஞர் – `சார்பட்டா பரம்பரை‘ தசரதன்
The Grand Stage is all set!
`சோழர்களின்’ ஆடை வடிவமைப்பாளர் ஏகா லக்கானி !
சிறந்த குழந்தை நட்சத்திரம் – 2022
குழந்தைகளை பயமுறுத்துவதற்குப் பேய்க்கதைகள் சொல்வார்கள். குழந்தையின் வழியே அதே பேய்க்கதை, வளர்ந்த நம்மை பயமுறுத்தி நடுங்கச் செய்தால்… செல்வராகவனின் ’நானே வருவேனி’ல் ஹியா தவே மூலம் செய்தது அதுதான். தேர்ந்த நடிகர்களுக்கு இணையாகத் தன்னையும் அதே தளத்தில் வெளிப்படுத்திக்கொண்ட ஹியாவின் திறமையை அங்கீகரிக்கிறது ஆனந்த விகடன்!
2022-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல்!
சிறந்த படம் – நட்சத்திரம் நகர்கிறது; சிறந்த இயக்குநர் – மணிகண்டன் (கடைசி விவசாயி); சிறந்த நடிகர் – கமல்ஹாசன் (விக்ரம்); சிறந்த நடிகை சாய் பல்லவி (கார்கி); சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரஹ்மான் (கோப்ரா, பொன்னியின் செல்வன்-1, வெந்து தணிந்தது காடு); சிறந்த நகைச்சுவை நடிகர் – யோகிபாபு (லவ் டுடே); சிறந்த வில்லன் – லால் (டாணாக்காரன்); சிறந்த வில்லி – ஐஸ்வர்யா ராய் (பொன்னியின் செல்வன்-1);
சிறந்த குணச்சித்திர நடிகர் – காளி வெங்கட் (கார்கி); சிறந்த குணச்சித்திர நடிகை – கீதா கைலாசம் (நட்சத்திரம் நகர்கிறது); சிறந்த அறிமுக இயக்குநர் – தமிழ் (டாணாக்காரன்); சிறந்த அறிமுக நடிகர் – கிஷன் தாஸ் (முதல் நீ முடிவும் நீ);
சிறந்த அறிமுக நடிகை – அதிதி ஷங்கர் (விருமன்); சிறந்த குழந்தை நட்சத்திரம் – ஹியா தவே (நானே வருவேன்); சிறந்த ஒளிப்பதிவு – ரவி வர்மன் (பொன்னியின் செல்வன்-1); சிறந்த படத்தொகுப்பு – பிரதீப் இ.ராகவ் (லவ் டுடே); சிறந்த கதை – தீபக், முத்துவேல் (விட்னஸ்); சிறந்த திரைக்கதை – ஹரிஹரன் ராஜு, கெளதம் ராமச்சந்திரன் (கார்கி); சிறந்த வசனம் – தமிழரசன் பச்சமுத்து (நெஞ்சுக்கு நீதி);
சிறந்த பாடலாசிரியர் – விவேக் (அன்பரே, சண்ட வீரச்சி); சிறந்த பின்னணிப் பாடகர் – ஏ.ஆர்.ரஹ்மான் (மறக்குமா நெஞ்சம்); சிறந்த பின்னணிப் பாடகி – மதுஸ்ரீ (மல்லிப்பூ); சிறந்த கலை இயக்கம் – தோட்டா தரணி (பொன்னியின் செல்வன்-1); சிறந்த ஒப்பனை – விக்ரம் கெய்க்வாட் (பொன்னியின் செல்வன்-1); சிறந்த சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன் (வலிமை); சிறந்த நடன இயக்கம் – ஜானி (மேகம் கருக்காதா); சிறந்த ஆடை வடிவமைப்பு – ஏகா லக்கானி (பொன்னியின் செல்வன்-1);
சிறந்த அனிமேஷன் – விஷுவல் எபெக்ட்ஸ் NY VFXWAALA (பொன்னியின் செல்வன்-1); சிறந்த தயாரிப்பு பொன்னியின் செல்வன்-1 (லைகா புரொடக்ஷன்ஸ் & மெட்ராஸ் டாக்கீஸ்); சிறந்த படக்குழு – விக்ரம்; சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் – லவ் டுடே; Best Entertainer – லோகேஷ் கனகராஜ்; சிறந்த வெப்சீரீஸ் – விலங்கு;
2022 ஆண்டுகளுக்கான விருது பெறுபவர்கள் யார், யார்?
2020-2021 ஆண்டுகளுக்கான விருது பெறுபவர்கள் யார், யார்?
தமிழ் சினிமாவுக்கு மணிமகுடம் சூட்டும் திருவிழா!
2020-21, 2022-ம் ஆண்டுகளுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா சென்னை வர்த்தக மையத்தில் இன்னும் சற்று நேரத்தில்…