மதுரை: தமிழ்நாட்டில் புறம்போக்கு நிலங்களின் தற்போதைய நிலை என்ன? அதை பயன்படுத்த செயல் திட்டம் ஏதும் உள்ளதா? என தமிழ்நாடு அரசின் நில நிர்வாகம் ஆணையர் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு புறம் போக்கு நிலம் அதிகளவில் இருக்கும் போது நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்து அரசு கட்டிடங்கள் கட்டப்படுவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.