புதுடில்லி,ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் ஹிந்தியில், ‘தஹி’ என, அச்சிடும்படி பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அதில் திருத்தம் செய்துள்ளது.
தமிழக அரசின் பால் உற்பத்தி நிறுவனமான ஆவின் மற்றும் கர்நாடக அரசின் பால் உற்பத்தி நிறுவனமான நந்தினி ஆகியவை தயாரிக்கும் தயிர் பாக்கெட்டுகளில், ‘தஹி’ என, ஹிந்தியில் குறிப்பிடும்படி, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் உத்தரவு வெளியிட்டது.
‘இது போன்ற ஹிந்த மொழி திணிப்பை ஏற்க முடியாது’ என, தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இந்த விவகாரம் தமிழக அரசியல் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ‘தயிர் பாக்கெட்டுகளில், ‘கர்ட்’ என ஆங்கிலத்தில் குறிப்பிட்டு, அதன் அருகே தயிர் என தமிழிலும், மொசறு என கன்னடம் உள்ளிட்ட உள்ளூர் மொழிகளில் அச்சிடலாம்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement