வாஷிங்டன், ”அமெரிக்காவில் உள்ள துாதரகங்கள் மற்றும் துாதரக அதிகாரிகளை பாதுகாக்க, அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசு உறுதிபூண்டு உள்ளது,” என, அந்நாட்டு வெளியுறவுத் துறை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்துள்ளார்.
காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கிற்கு ஆதரவாக, அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய துாதரகம், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை துாதரகத்த்தில், அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், ”அமெரிக்காவில் உள்ள துாதரகங்கள் மற்றும் துாதரக அதிகாரிகளை பாதுகாக்க, அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசு உறுதிபூண்டுள்ளது,” என, அந்நாட்டு வெளியுறவுத் துறை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
இந்திய துாதரகங்களில் சமீபத்தில் நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
அமெரிக்காவில் பேச்சு சுதந்திரம் எந்த நிலையிலும் ஒடுக்கப்படாது. அதே நேரத்தில், போராட்டம் என்ற பெயரில், வன்முறை சம்பவங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.