தென்னிலங்கையில் கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி


தென்னிலங்கையில் நேற்றிரவு நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை – கொழும்பு பிரதான வீதியில் பயணித்த லொறி ஒன்றும் கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றைய நபர் படுகாயங்களுடன் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

தென்னிலங்கையில் கோர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி | Three Members Of The Same Family Were Killed

48 வயதுடைய குடும்பஸ்தரும் உயிரிழப்பு

கோர விபத்தில் கார் சாரதியான 55 வயதுடைய குடும்பஸ்தரும், காரின் முன் ஆசனத்தில் இருந்து பயணித்த அவரது 27 வயதுடைய மகனும், காரின் பின் ஆசனத்தில் இருந்து பயணித்த கார் சாரதியின் சகோதரரான 48 வயதுடைய குடும்பஸ்தரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதியான 29 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.