உடல்நல பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நடிகர் பாலா, தனது மனைவியுடன் திருமணநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
நடிகர் பாலா
தமிழில் அன்பு, வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களிலும், மலையாளப் படங்களில் நடித்து பிரபலமானவர் பாலா. இவர் தற்போது கல்லீரல் தொடர்பான பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை பெற்று வரும் பாலாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில் தனது இரண்டாவது மனைவியுடன் 2ஆம் ஆண்டு திருமண நாளை மருத்துவமனையில் கேக் வெட்டி கொண்டாடினார்.
மரணிக்க வாய்ப்பு
அப்போது பேசிய அவர், ‘எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதில் மரணத்திற்கும் வாய்ப்புள்ளது, உயிர்பிழைக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது.
எதிர்மறையாக எதையும் சிந்திக்கவில்லை. எனக்காக பிரார்த்தனை செய்து வரும் அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.
பாலா விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் உட்பட பலரும் கூறி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.