வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
ஷகிப் மிரட்டல் பந்துவீச்சு
அயர்லாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வங்கதேச அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் 22 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற உலகசாதனையைப் படைத்தார்.
@Reuters
அவர் 114 போட்டிகளில் 136 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் நியூசிலாந்தின் டிம் சௌதீ (134) உள்ளார்.
தரவரிசைப் பட்டியலில் முதலிடம்
சாதனைப் படைத்த ஷகிப் அல் ஹசன், ஐசிசி ஆடவர் டி20 ஆல் ரவுண்டர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஷகிப் மொத்தம் 265 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
@Getty
வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
@AFP