டெல்லி: யானைகள் பற்றிய குறும்படத்திற்காக ஆஸ்கர் வென்ற இயக்குநர், தயாரிப்பாளர் பிரதமர் மோடியை சந்தித்தனர். இயக்குநர் கார்த்திகி, தயாரிப்பாளர் குனீத் மோங்கா டெல்லியில் பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ஹாலிவுட் திரைப்படங்களுக்கான 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் கடந்த மார்ச் 13ம் தேதி நகரில் நடைபெற்றுது. இதில் யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண குறுப்படம் ஆஸ்கர் விருதை வென்றது.
முதுமலை தெப்பகாடு யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் குட்டி யானைகள் பராமரித்த பாகன் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெல்லி ஆகியோரை மையமாக கொண்டு ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ எனப்படும் ஆவண குறும்படத்தை இயக்குநர் கார்த்திகி இயக்கியிருந்தார்.
இந்த ஆவணப்படம் நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் தாயை பிரிந்த இரண்டு யானை குட்டிகளும், அவற்றின் பராமரிப்பாளர்களுக்கும் இடையிலான பிரிக்க முடியாத பிணைப்பை சித்தரித்து எடுக்கப்படுள்ளது.
இந்நிலையில் ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண குறும்படத்தை இயக்கிய கார்த்திகி மற்றும் தயாரிப்பாளரான குனீத் மோங்கா ஆகியோர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.