பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர்
சமீபத்தில் நடந்த 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தமிழகத்தில் முதுமலை யானைகள் முகாமில் யானைகளை பராமரித்து வரும் பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியினரின் வாழ்க்கையை சொல்லும் விதமாக உருவாகியிருந்த தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் குறும்படத்திற்கு சிறந்த டாக்குமென்டரி படம் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இந்த டாக்குமென்ட்ரியை கார்த்திகி கொன்சால்வெஸ் என்பவர் இயக்கினார். இந்த படக்குழுவையும், யானை பராமரிப்பு தம்பதியரையும் பிரதமர், முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் 'தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் படக்குழுவினரான இயக்குனர் கார்த்திகி, தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்களை பாராட்டிய பிரதமர், இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தி உள்ளதாக வாழ்த்தினார்.