புதுடில்லி : புதுடில்லியில் தற்போதுள்ள பார்லிமென்ட் கட்டடம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இக்கட்டடம் பல பகுதிகளில் சேதமடைந்துள்ளது.
மேலும், பார்லிமென்ட் கூட்டுக் கூட்டம் போன்ற, முக்கிய நிகழ்வுகள் நடக்கும்போது, போதிய இடவசதி இல்லாத சூழல் நிலவுகிறது.
இதையடுத்து, நவீன வசதிகள், போதிய இட வசதிகளுடன் புதிய பார்லிமென்ட் கட்டும் பணி, 2020 டிச., மாதம் துவங்கியது. 862 கோடி ரூபாய் செலவில், ‛டாடா’ நிறுவனம் இப்பணிகளை மேற்கொண்டுள்ளது.
புதிய பார்லிமென்ட்டின் இரு அவைகளையும், பிரதமர் மோடி இன்று (மார்ச்.,30)ம் தேதி பார்வையிட்டார். ஒரு மணிநேரத்துக்கும் மேல், இந்த ஆய்வு நடந்தது.
Advertisement