கடந்த 25 ஆம் தேதி மதுரை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிறந்து ஒரு சில நாட்கள் ஆன பெண் குழந்தையை பெண் ஒருவர் சிகிச்சைக்காக கொண்டு வந்தார்.
அவருக்கும் அந்த குழந்தைக்கும் சம்மந்தம் இல்லாமல் இருந்ததால் செய்விலியர்கள் குழந்தையின் தாய் யாரென்று கேள்வி கேட்டனர். அதற்கு அந்த பெண் பதில் சொல்லாமல் திணறியதால் சந்தேகமடைந்த செவிலியர்கள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
அந்த தகவலின் படி போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், அவர் உசிலம்பட்டி அருகே உள்ள ஒத்தவீடு கிராமத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்பது தெரிந்தது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையை அவரது தாயே விற்க சொல்லி கொடுத்ததும், குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் சிகிச்சை அளித்துவிட்டு பின்னர் விற்கலாம் என்று நினைத்ததும் தெரிய வந்தது.
அதன் படி, போலீசார் குழந்தையின் தாயிடம் விசாரணை மேற்கொண்டதில், குழந்தையை விற்பனை செய்வதற்கு நான்கு உதவியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவர்கள் நான்கு பேரையும் கைது செய்தனர்.