போபால்: மத்திய பிரதேசத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசல் காரணமாக கோயில் கிணறு இடிந்து 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய பிரதேசத்தின் இந்தூர் பட்டேல் நகரில் உள்ள கோயில் ஒன்றில் ராமநவமி கொண்டாட்டம் நடைபெற்றது. அளவுக்கு அதிகமாக கூட்டம் காரணமாக அந்த கோயிலில் உள்ள பழமையான படிக்கட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதனால் பக்தர்கள் கிணற்றுக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புத்துறை அங்கு மீட்பு பணிகளை தொடங்கிய நிலையில் 12 பேர் உடல்கள் மீட்கப்பட்டனர். கிணற்றுக்குள் மேலும் சிலர் சிக்கிய இருக்கலாம் என்பதால் அவர்களை மீட்கும் பணி தொடங்கியது. நீளமான ஏணிகளை கொண்டு மீட்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தையறிந்து முகுந்த மன வேதனையடைந்ததாக பிரதமர் மோடி டிவீட்டரில் பதிவிட்டுள்ளார்.