எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
ஆப்பிரிக்க நாடானா புருண்டியில், புது வகை வைரஸுக்கு மூன்று பேர் பலியான சம்பவத்தை அடுத்து அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொடக்கம்
அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது.
உயிர்ப்பலிகள்
உலகம் முழுவதும் பலகோடி மக்கள் கொரோனாவால் உயிரிழந்தன. இந்தியாவில் கொரோனா 2 ஆலைகளின் போதும் பல உயிர்கள் பறிபோயின. அதேபோல் பொருளாதாரத்தையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. கொரோனா ஊரடங்கால் பல நாடுகள் பொருளாதார சரிவை கண்டன. வேலை வாய்ப்புகள் பறிபோய், பல தற்கொலை நிகழ்வுகளும் நடந்தன.
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா
இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் இயல்பு நிலை உலகமெங்கும் திரும்பியது. இந்தசூழலில் மீண்டும் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் புதுவகையான வைரல் ஒன்று ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ளது, உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புது வைரஸ்
ஆப்பிரிக்க நாடான புருண்டியில் உள்ள ஒரு சிறிய நகரத்தை அடையாளம் தெரியாத வைரஸ் பரவி வருகிறது. ஊடக அறிக்கைகளின்படி, நகரின் பாசிரோ பகுதியில் சிலருக்கு மூக்கில் இரத்தம் கசிவை ஏற்படுத்திய மர்ம வைரஸ் காரணமாக இதுவரை மூன்று பேர் இறந்துள்ளனர்.
அச்சச்சோ இந்த நோயா.?.. இளம்பெண்களே உஷார்.. அரிய வகை நோய் பராக்.!
திடீரென காய்ச்சல், தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் வாந்தி உள்ளிட்ட அறிகுறிகளை கொண்டு இந்த வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது. நாட்டில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் அதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இது எபோலா மற்றும் மார்பர்க் ஆகிய வைரஸ்களால் நிகழவில்லை என்று நாட்டின் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மூன்று பேர் பலி
இதற்கிடையில், ஒரு சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக இரண்டு பேர் கொண்டு வரப்பட்டதை அடுத்து, சுகாதார அதிகாரிகள் பாசிரோ பகுதியை தனிமைப்படுத்தியுள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பேரழிவை ஏற்படுத்தும் நவீன ஆயுதம்; வடகொரியாவின் செயலால் உலகநாடுகள் அச்சம்.!
மூன்று நோயாளிகளும் மருத்துவமனைக்கு வருவதற்கு 24 மணி நேரத்திற்குள் மூக்கில் இருந்து இரத்தப்போக்கு ஏற்பட்டதால், நோய் ‘விரைவாகக் கொல்லப்படும் அபாயம் உள்ளது’ என்று மிக்வா சுகாதார மையத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் கூறியதாக மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
மிக அதிக ஆபத்து
புருண்டியின் சுகாதார அமைச்சகம் இந்த வைரஸ் ஒரு தொற்று ரத்தக்கசிவுப் பிழையாகத் தோன்றுகிறது என்று கூறியது. இந்த மாத தொடக்கத்தில், அண்டை நாடான தான்சானியாவில் மார்பர்க் வைரஸ் பரவலை அறிவித்தது. அதைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு அருகிலுள்ள நாடுகளுக்கு ‘மிக அதிக ஆபத்து’ என்று அறிவித்தது என்பதும் குறிப்பிடதக்கது.