வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரதமர் மோடியை சிக்க வைக்க தனக்கு சிபிஐ பிரஷர் கொடுத்ததாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். டில்லியில் உள்ள ஒரு ஆங்கில சேனல் நடத்திய சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: ராகுல் சட்டப்படியே குற்றவாளி என கோர்ட் அறிவித்துள்ளது. இதில் எங்களின் பங்கு எதுவும் இல்லை. அவர் பிரதமர் மோடியை மட்டும் தாக்கி பேசவில்லை. மோடி என்ற பிற்படுத்தப்பட்ட இனத்தையே அவமானப்படுத்தி உள்ளார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் தானாக பதவி இழக்க நேரிடும். இது தான் நமது நாட்டின் சட்டம். ஆனால் இவரது தண்டனைக்கு எதிராக கோர்ட்டுக்கு செல்லாமல் எங்களை குறை கூறுகிறார். எம்.பி.,யாகவும் இருக்க வேண்டுமாம், கோர்ட்டுக்கு செல்ல மாட்டாராம். இது என்ன அடம் என்று புரியவில்லை.
இதற்கு முன்னதாக ஜெயலலிதா , லாலு உள்பட 17 பேர் இது போல் தண்டிக்கப்பட்டுள்ளனர். யாரும் கறுப்புச்சட்டை அணிந்து போராடவில்லை. ஆனால் ராகுல் நாங்கள் தான் காரணம் என்பது போல் பேசுகிறார்.
ராகுல் விவகாரத்தில் நாங்கள் யாருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரதமர் குஜராத் முதல்வராக இருந்தபோது போலி என்கவுன்டர் வழக்கில் மோடியை சிக்க வைக்க கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு என் மீது சி.பி.ஐ., அழுத்தம் கொடுத்தது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.
Advertisement