இறையன்புடன் சேவையாற்றுங்கள்
குடித்து விட்டு மனைவியை அடிப்பது, கடன் பெற்றவரிடம் அநியாய வட்டி கேட்பது என பல பாவங்களை மனிதன் செய்கிறான். ஆனால் துன்பத்திற்கு ஆளாகும் போது, ‘செய்த பாவத்தின் விளைவால் இந்த இழிநிலைக்கு ஆளாகி விட்டேனே’ என மனம் நோகிறான். இதனால் என்ன பயன்?
‘இனி பாவம் செய்ய மாட்டேன்’ என திருந்துவது தான் ஒரே வழி.மனம் திருந்திய பின் பாவத்தில் இருந்து விலகுவதோடு மற்றவர்களின் துன்பம் தீர உதவி செய்யவும் வேண்டும். அதற்கு பணம் தேவை எனக் கருத வேண்டாம். “வழிப்போக்கர்களுக்கு இடையூறாக பாதையில் முள்மரம் கிடந்தது. அதை அப்புறப்படுத்தியவரின் பாவங்களை மன்னித்தான் இறைவன்” என்கிறது குர்ஆன்.
முள்ளை அப்புறப்படுத்தியவர், வழிபோக்கர்களின் பாதங்களைப் பாதுகாத்தார். இறையருளால் அவரது பாவங்கள் உடனடியாக மன்னிக்கப்பட்டன.
சேவையில் ஈடுபடுவோர் பிறர் பாராட்ட வேண்டும் என்றோ, அகந்தை எண்ணத்துடனோ செய்யக் கூடாது. இறையன்பால் மட்டுமே சேவையில் ஈடுபட வேண்டும். நம்மிடம்
உதவி பெறுபவரிடம் இருந்து பிரதிபலனோ, நன்றியோ எதிர்பார்க்கக் கூடாது.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:42 மணி
Advertisement