குருவின் பார்வை இருந்தால்தான் எல்லா நல்ல விஷயங்களும் நம்மைத் தேடி வரும் என்பது ஐதீகம். உமையவளுக்கே குருவின் பார்வை கிடைத்ததும்தான் திருமணம் நடந்தேறியது என்கிறது புராணம். நவக்கிரகங்களில் சுபகிரகம் வியாழ பகவான். அந்த வியாழ பகவான் தான், தேவர்களின் குரு. அவரை பிரகஸ்பதி என்பார்கள். இவர்தான் குரு பகவான். குருப்பெயர்ச்சி என்பது இவருக்குத்தான். இவரை வைத்துத்தான் குருப்பெயர்ச்சி. ஒருவரின் வாழ்வில், குருவின் கடாக்ஷம் இருந்துவிட்டால், செய்யும் தொழில் சிறக்கும். பதவி உயர்வு இருக்கும். நல்ல குழந்தைகள் கிடைப்பார்கள். […]