விருதுநகர்: பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் காரணமாக விருதுநகர் ஆவின் நிர்வாக குழு கலைக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாக குழு அமைக்கப்பட்டது. நிர்வாக குழு மூலம் சுமார் 25 பணியிடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டது விசாரணையில் அம்பலமானது.