வெளியானது பத்து தல… ஹெலிகாப்டருடன் வந்த கூல் சுரேஷ்… மிரட்டல் கொண்டாட்டம்!

Pathu Thala Cool Suresh Celebration: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிம்பு நடிப்பில் இந்தாண்டு வெளியாகும் முதல் படம் ‘பத்து தல’. இத்திரைப்படத்தில், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படம் ஜில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை எடுக்க கிருஷ்ணா இயக்கத்திலும், ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜாவின் தயாரிப்பிலும் உருவாகிறது. 

இத்திரைப்படம் இன்று முதல் திரையரங்கில் வெளியாகியுள்ளது. மேலும், பத்து தல உலகெங்கும் காலை 8 மணியளவில் முதல்நாள் காட்சிகள் தொடங்கியுள்ளன. மேலும், அவர்களின் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளார். மேலும், சிம்புவின் முந்தைய படமான வெந்து தணிந்தது காடு பெருமளவு பேசப்பட்டதால், இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பும் உள்ளது.

மாநாடு, வெந்து தணிந்தது காடு வசூல் வெற்றியை அடுத்து ஹாட்ரிக் வெற்றியை பெற சிம்பு தவமாய் தவமிருக்கிறார். அதுமட்டுமின்றி, ராஜ்கமல் தயாரிப்பில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், சிம்பு அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதன்மூலம், சிம்புவின் மார்க்கெட் மதிப்பும் உச்சத்தை தொட்டுள்ளது என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனை தக்கவைக்க பத்து தல படத்தின் வெற்றி சிம்புவுக்கு இன்றியமையாததாக உள்ளது. 

கூல் சுரேஷ் கொண்டாட்டம்

சிம்பு இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கன்னடத்தில் வெளியான மஃப்டி என்ற படத்தின் ரீ-மேக் என்றாலும், தமிழுக்கு என பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இத்திரைப்படம் இன்று வெளியானதை அடுத்து, சிம்புவின் நண்பரும், நடிகருமான கூல் சுரேஷ் சென்னை திரையரங்க வளாகத்தில் பட வெளியானதையொட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். 

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக, தான் பத்து தல படம் பார்க்க ஹெலிகாப்டரில் வருவேன் என கூறியிருந்தார். அதையொட்டி, அவர் கையில் பொம்பை ஹெலிகாப்டருடன் வந்து அவருக்கு உரித்தான பாணியில் திரையரங்கில் கொண்டாட்டத்தை மேற்கொண்டார். 

சமீபத்தில், ஊடகம் ஒன்றுக்கு கடலுக்கு நடுவே படகில் பேட்டியளித்துகொண்டிருந்தபோது, கூல் சுரேஷ் திடீரென கடலில் குதித்த சம்பவம், இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.