தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ரூ.294 ஆக வழங்கப்படும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அறிவித்துள்ளார். ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தமிழக சட்டப்பேரவையில் இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஊதியம் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரூ.281-ல் இருந்து ரூ.294-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றார். ஊரக பகுதிகளில் பணிபுரியும் 66,130 தூய்மை காவலர்களின் மதிப்பூதியம் உயர்த்தப்படும். தூய்மை காவலர்களின் […]