உக்ரைனின் இரு நகரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
உக்ரைனின் இரு நகரங்கள்
ரஷ்யாவின் போர்த்தாக்குதலால் உக்ரைனின் பல நகரங்கள் உருகுலைந்துள்ளன. குறிப்பாக புச்சா, இர்பின் ஆகிய இரு நகரங்கள் பலத்த சேதமடைந்தன.
மேற்கத்திய நாடுகளிடம் கூடுதல் ராணுவ உதவியை கோரி வரும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, தற்போது வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Events that couldn’t be imagined in the XXI century. 🇷🇺 troops, heading to Kyiv, sowed death and destruction in Bucha and Irpin. For many residents of the Kyiv region, it was the most horrific moment in life. But the liberation of these cities became proof that Ukraine will win. pic.twitter.com/rSJ6HuL7iY
— Володимир Зеленський (@ZelenskyyUa) March 30, 2023
ஜெலென்ஸ்கியின் பதிவு
அதில், ’22ஆம் நூற்றாண்டில் கற்பனை செய்ய முடியாத நிகழ்வுகள் இவை. ரஷ்ய துருப்புகள் கீவ்விற்கு சென்று மரணத்தை விதைத்தன.
மேலும் புச்சா மற்றும் இர்பினில் அழிவை ஏற்படுத்தின. கீவ் பிராந்தியத்தில் வசிக்கும் பலருக்கு, இது வாழ்க்கையில் மிகவும் பயங்கரமான தருணம்.
ஆனால் இந்த நகரங்களின் விடுதலை, உக்ரைன் வெற்றி பெறும் என்பதற்கு சான்றாக அமைந்தது’ என தெரிவித்துள்ளார்.
@Chris McGrath/Getty Images
முன்னதாக, உக்ரேனிய பகுதிகளின் இழப்பு ஆயுதப் படைகளின் தாக்குதல் வேகத்தை ஆபத்தில் ஆழ்த்தலாம் என ஜெலென்ஸ்கி எச்சரிக்கை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.