சென்னை: 29 மாவட்டங்களில் சுய உதவிக்குழு தயாரிக்கும் பொருட்களை விற்கும் பூமாலை வளாகங்கள் ரூ.6.16 கோடியில் புதுப்பிக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பதிலுரை அளித்தார். அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்கை அடைய ரூ.20 கோடியில் பயிற்சி அளிக்கப்படும். 2 ஆண்டுகளில் ஊரக, நகர்ப்புறங்களில் 70,800 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.87.37 கோடியில் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது.