தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் சனா. இவர் ஏறக்குறைய சுமார் 200 படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அம்மா, அக்கா, பாட்டி கேர்கடரில் கூட நடித்துள்ளார். இந்நிலையில் இவர் ‘மெட்ரோ காதல்’ என்ற தொடரில் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துள்ளது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இதுக்குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார் சனா.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
பல மொழி படங்களில் நடித்துள்ளார் சனா. தற்போது சீரியல்களிலும் நடித்து வரும் சனா ‘மெட்ரோ காதல்’ என்ற தொடரில் பல ரொமான்ஸ் காட்சிகளில் துணிச்சலாக நடித்துள்ளார். ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த தொடர் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதுக்குறித்து பேட்டி ஒன்றில் பேசிய சனா, மெட்ரோ காதல் தொடரில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதிற்கு முக்கியமான காரணம் கருணா சுகுமாரும், எழுத்தாளர் காதற்பாபுவும் தான். என்னிடம் அவர்கள் கதை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது. அதில் முக்கியமான கதாபாத்திரம் என்னுடையது. குடிகார கணவன். மனைவியை பற்றி கவலைப்படாத அவன் செய்யும் துன்புறுத்தல் காரணமாக ஆண்களை வெறுக்கிறாள்.
அப்படியாப்பட்ட சூழ்நிலையில் இளைஞர் ஒருவரின் அறிமுகம் கிடைக்கிறது. அவனுடன் தவறு செய்ய விரும்பாவிட்டாலும், செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆள்கிறாள். மனைவி மீது கணவன் கவனம் செலுத்தவில்லை என்றாலும் அந்த பெண் அவளது ஆசைகளை எவ்வாறு கட்டுப்படுத்த இயலும். தன்னுடைய பொறுப்புகளை அவள் எவ்வாறு கையாளுகிறார் என்பது என்னுடைய கதாபாத்திரத்தின் கதை.
பாலிவுட்டில் பிரியங்கா சோப்ராவுக்கு நடந்த கொடுமை: வெளியான அதிர வைக்கும் தகவல்.!
நிஜ வாழ்க்கையில் பல பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கலை என்னுடைய கதாபாத்திரத்தின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளேன். இதன் மூலம் அனைவருக்கும் நல்ல செய்தி கிடைத்துள்ளது. உண்மைக்கு நெருக்கமான கதை என்பதால் அந்த மாதிரியான காட்சிகளில் நடித்தேன். இதுபோன்ற எதார்த்தமான கதாப்பாத்திரங்கள் கிடைத்தால் கண்டிப்பாக நான் நடிப்பேன்.
விமர்சனங்கள் வரும் என்று தெரிந்து தான் இந்த கதாபாத்திரத்தில் நடித்தேன் என தெரிவித்துள்ளார் சனா. அவரின் இந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Simbu: சிம்புவை அழிக்க துடிக்கும் குரூப்: பங்கமாய் கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்..!