எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Ajith starrer AK62: அஜித்தின் ஏ.கே. 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
ஏ.கே. 62அஜித் குமாரின் ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார், அனிருத் இசையமைப்பார் என லைகா நிறுவனம் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டு மகிழ்திருமேனியை ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஏப்ரல் மாதம் நல்ல செய்தி வரும் என லைகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AK62:ஏ.கே. 62க்காக மகிழ் திருமேனிக்கு கிடைத்த லைஃப் டைம் செட்டில்மென்ட்: கோடி கோடியா கொட்டுதே
அப்டேட்Ajith: அஜித்தால் மகிழ்திருமேனி எஸ்கேப்: ஏப்ரலில் வரும் அறிவிப்புஏ.கே. 62 பட அறிவிப்பு எப்பொழுது வெளியாகும் என அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அறிவிப்பு வராத நிலையிலும் சமூக வலைதளங்களில் #Ak62 #Ajith ஆகிய ஹேஷ்டேகுகள் தினமும் டிரெண்டாகி வருகின்றன. அதுவும் தேசிய அளவில் டிரெண்டாகிறது. மேலும் எந்த பட அப்டேட் வந்தாலும் சரி ஏ.கே. 62 பற்றிய பேச்சு மட்டும் அடங்கியபாடில்லை.
அஜித் ரசிகர்கள்யோவ் லைகா அப்டேட் கொடுப்பியா மாட்டியா என அஜித் ரசிகர்கள் மிரட்டியும், கெஞ்சியும் பார்த்துவிட்டார்கள். ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை. அஜித் ரசிகர்களின் நிலையை பார்த்து விஜய் ரசிகர்கள் கூட பாவப்படுகிறார்கள். இயக்குநர், தயாரிப்பாளர் மாறினாலும் இந்த அஜித் ரசிகர்களின் பரிதாப நிலை மட்டும் மாறவில்லை. தயவு செய்து அப்டேட் கொடுங்கள் என விஜய் ரசிகர்கள் கூட லைகாவிடம் கோரிக்கை விடுத்துவிட்டார்கள்.
எதிர்பார்ப்புஅப்டேட் வருதோ, வரவில்லையோ அது இரண்டாவது விஷயம். ஏ.கே. 62 மீதான எதிபார்ப்பு கண்டமேனிக்கு எகிறிக் கிடக்கிறது. அஜித் படம் குறித்த அறிவிப்பை அனைத்து தரப்பு ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். அறிவிப்பு வரும் நாளில் படத்தின் தலைப்பை வெளியிடுவார்கள். அந்த தலைப்பு நிச்சயம் டிரெண்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஷூட்டிங்AK62: எதிர்பார்த்த மாதிரியே செய்த அஜித்: ஏ.கே. 62 ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்அஜித்தின் தந்தை சுப்ரமணியம் மார்ச் 24ம் தேதி இறந்துவிட்டார். இதையடுத்து ஏ.கே. 62 படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போகும் என்று கூறப்பட்டது. ஆனால் தனக்காக படக்குழு காத்திருப்பதை அஜித் விரும்பவில்லையாம். இதையடுத்து மே மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பை துவங்க முடிவு செய்திருக்கிறார்களாம். அப்படியே அஜித் பிறந்தநாள் அன்று படப்பிடிப்பை துவங்கி வீடியோ, புகைப்படத்தை வெளியிடவும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விஜய்ஏ.கே. 62 பட வேலையை முடித்துவிட்டு தன் பைக்கில் உலக டூர் போக திட்டமிட்டார் அஜித். அந்த பயணத்துக்கு பரஸ்பர மரியாதை பயணம் என்று பெயர் வைத்தார். தந்தை இறந்த நிலையில் தன் பைக் டூர் திட்டத்தை தள்ளி வைத்துவிட்டாராம். அஜித்தின் தந்தை அறிந்த செய்தி அறிந்ததுமே அவரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார் விஜய். தான் அஜித் வீட்டிற்கு செல்வது பப்ளிசிட்டியாக மட்டும் மாறிவிடக் கூடாது என தன் டீமிடம் உத்தரவிட்டாராம் விஜய். இதையடுத்து நண்பர் விஜய்க்கு அஜித் ரசிகர்கள் நன்றி தெரிவித்தனர்.
Vijay, Ajith: அஜித் வீட்டுக்கு செல்ல விஜய் போட்ட கன்டிஷன்: பாராட்டும் ஏ.கே. ரசிகர்கள்