சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் படம் தான் போலா.
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்த படத்தை இயக்கி நடித்துள்ளார். போலா படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியான போதே கைதி படத்துடன் கம்பேர் செய்யப்பட்ட நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் படம் எப்படி இருக்கு? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தி படமான போலா கைதி படத்தின் பெயரை காப்பாற்றியதா? இல்லை காவு வாங்கியதா? என்பது குறித்து ரசிகர்கள் சொல்லி உள்ள கருத்துக்களின் தொகுப்பை இங்கே காணலாம்..
கைதி இந்தி ரீமேக்
மாநகரம் படத்தை முடித்து விட்டு அடுத்த படத்தை மன்சூர் அலி கானை வைத்து இயக்கலாம் என இருந்த லோகேஷ் கனகராஜிடம் இந்த கதை நல்லா இருக்கு நானே பண்றேன் என கார்த்தி உள்ளே நுழைந்து லோகேஷ் கனகராஜின் கரியரையே தூக்கி நிறுத்திய படம் தான் கைதி. அந்த படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் படமான போலா இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
அஜய் தேவ்கன் ஆக்ஷன்
சிங்கம், த்ரிஷ்யம் என தென்னிந்திய படங்களை இந்தியில் ரீமேக் செய்து ஆக்ஷனில் அதிரடி காட்டி வரும் நடிகர் அஜய் தேவ்கன் இயக்கி நடித்துள்ள படம் தான் போலா. கைதி படத்தை விட பல மடங்கு சிஜி வொர்க்குகளை ஆக்ஷன் காட்சிகளுக்கு போட்டு 3டியிலேயே படத்தை வெளியிட்டு தெறிக்கவிட்டு இருக்கிறார்.
மசாலா எண்டர்டெயினர்
அஜய் தேவ்கன், தபு நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில் சர்ப்ரைஸ் என்ட்ரியாக அபிஷேக் பச்சன் நடித்துள்ளார் என சஸ்பென்ஸை நெட்டிசன்கள் லீக் செய்துள்ளனர். ஒரு வேளை கடைசியா அந்த வில்லன் கதாபாத்திரம் தான் அபிஷேக் பச்சனா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். செம மசாலா எண்டர்டெயினர் என ரசிகர்கள் 4 ஸ்டார் ரேட்டிங் கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.
கூஸ்பம்ப்ஸா இருக்கு
ஒரே வார்த்தையில இந்த படத்தை விமர்சனம் பண்ணனும்னா மாஸ்டர்பீஸ் என தியேட்டருக்கு வெளியே போஸ்டருடன் எடுத்த போட்டோவையே ஷேர் செய்து இந்த ரசிகர் ஒவ்வொரு சீனும் கூஸ்பம்ப்ஸா இருக்கு படம் வேறலெவல் மிரட்டல் என பாராட்டி உள்ளார்.
டோட்டல் டிசாஸ்டர்
போலா படம் கைதி படம் அளவுக்கு எல்லாம் இல்லை என்றும் ஒரே வார்த்தையில் சொல்லணும்னா டிசாஸ்டர் என இந்த நெட்டிசன் படத்தை மொத்தமாக கழுவி ஊற்றி இருக்கிறார். வெறும் 2 ரேட்டிங் மட்டும் தான் தரலாம் என்றும் அஜய் தேவ்கன் முகத்தில் எக்ஸ்பிரஷனே வர மாட்டேங்குது என விமர்சித்துள்ளார்.
சிறுத்தையே பம்முது
சிங்கம் அஜய் தேவ்கனை பார்த்து சிஜி சிறுத்தை ஒன்று பம்மி ஓடுவது போன்ற காட்சிகள் எல்லாம் போலா படத்தில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் ஆர்ஆர்ஆர் எஃபெக்ட்டா இது என்றும் கைதி படத்தில் இந்த கன்றாவி எல்லாம் இல்லையே? ஏன் அஜய் தேவ்கன் இப்படி இறங்கிட்டாரு என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.