திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் பலியாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
பெரியபாளையம் அடுத்த ஆரணி அரசு பள்ளிகள் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மாணவன் தமிழ்ச்செல்வன் பலியாகியதாக போலீசார் முதல் கட்ட தகவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் பொன்னேரி பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கக்கூடிய பிரகதீஸ்வரன் என்ற மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவன் பிரதீஸ்வரன் உயர்ந்ததற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்குகிடையே மாணவன் பிரதீஸ்வரன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டி, மாணவனின் பெற்றோர் மற்றும் அவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.