சென்னை: இயக்குநர் ஷங்கர் தற்போது கமலின் இந்தியன் 2, ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படங்களில் பிஸியாக உள்ளார்.
ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.
தில் ராஜூ தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கேம் சேஞ்சர் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் படத்திற்காக இயக்குநர் ஷங்கர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷங்கரின் கேம் சேஞ்சர்
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் RC 15 படத்தின் டைட்டில் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதனைத் தொடர்ந்து ராம் சரணின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. கேம் சேஞ்சர் என்ற டைட்டில், ராம் சரணின் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை இது பொலிட்டிக்கல் ஜானர் படம் தான் என்பதை கன்ஃபார்ம் செய்துவிட்டது. கார்த்திக் சுப்புராஜ் எழுதிய ஒன்லைனில் இருந்து இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார் ஷங்கர்.
இயக்குநர் ஷங்கரின் சம்பளம்
தில் ராஜூ தயாரிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் இந்தாண்டு இறுதிக்குள்ள வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரம்மாண்டமான கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தின் மேக்கிங்கும் தாறுமாறாக இருக்கிறதாம். இதனால் இயக்குநர் ஷங்கருக்கும் பல கோடிகளில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல். ஏற்கனவே கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர் என்ற பெருமை அவருக்கு தான் உள்ளது. இப்போது டோலிவுட்டிலும் தனது வேட்டையை தொடங்கியுள்ளார்.
ஆச்சரியத்தில் கோலிவுட்
அதன்படி, கேம் சேஞ்சர் படத்திற்காக இயக்குநர் ஷங்கருக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். டோலிவுட்டில் ராஜமெளலி மட்டும் தான் 50 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கி வருகிறார். இப்போது அவருக்கு மட்டும் இல்லாமல், டாப் ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் ஷங்கர். இந்தத் தகவல் கோலிவுட், டோலிவுட் வட்டாரத்தில் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ட்ரோல்
இதனிடையே ராம் சரணின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். முழுவதும் கிரே ஷேடில் உருவாகியுள்ள இந்த போஸ்டரில் பைக் மீது செம்ம மாஸ்ஸாக அமர்ந்திருக்கிறார் ராம் சரண். அதேபோல் அவரது ஹேர் ஸ்டைலும் ப்ளேபாய் லுக்கில் உள்ளது. கூலர்ஸ் போட்டு பைக்கில் இருந்து ராம் சரண் இறங்குவது போல இந்த போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது ஃபேன்மேட் போஸ்டரைவிடவும் சுமாராக இருப்பதாக ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.