எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Ponniyin Selvan 2 audio launch: பொன்னியின் செல்வன் 2 பட விழாவில் கலந்து கொண்ட கமல் ஹாசன், மணிரத்னத்தை பார்த்து பொறாமையாக இருப்பத்தாக கூறியிருக்கிறார்.
பொன்னியின் செல்வன் 2மணிரத்னம் இயக்கத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. முதல் பாகம் ரூ. 500 கோடி வசூல் செய்தது. அதனால் இரண்டாம் பாகம் ரூ. 1000 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
Ponniyin Selvan 2: நான் இன்னும் பொன்னியின் செல்வன் படத்தையே பார்க்கல: அதிர வைத்த பார்த்திபன்
கமல் ஹாசன்நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் உலக நாயகன் கமல் ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய கமல் ஹாசன் கூறியதாவது, சிறு வயதில் இருந்து என்னை மேடையில் நிறுத்தி வைத்திருக்கும் தமிழ் மக்களுக்கு நன்றி. அது தம்பி சிம்புவுக்கு புரியும். ஏனென்றால் அவரும் சிறு வயதில் இருந்தே நடித்துக் கொண்டிருக்கிறார். இது தொழில் அல்ல கடமை. நான் சந்தோஷமாக செய்கிறேன் அதற்கு சம்பளமும் தருகிறார்கள் என்றார்.
பொறாமைபல திறமைசாலிகளுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சில பட வாய்ப்புகள் கைவிட்டும் போயிருக்கிறது. பொன்னியின் செல்வனை போன்று. அதனால் தான் வாய்ஸ் ஓவர் கொடுத்தேன். மணிரத்னத்தை பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது. இப்படிப்பட்ட படத்தை இயக்கிவிட்டு அமைதியாக அமர்ந்திருக்கிறார் மணிரத்னம் என கமல் ஹாசன் மேலும் தெரிவித்தார்.
ரஹ்மான்ஏ.ஆர். ரஹ்மானின் ஆர்கெஸ்ட்ரா பாடிய பாடல்களை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு மேஜிக். பாடல்களை கேட்டு அசந்துவிட்டேன். விவரிக்க வார்த்தையே இல்லை. வாழ்க்கை சிறியது. அதில் சினிமா வாய்ப்பு அதைவிட சிறியது. அதனால் கிடைக்கும் வாய்ப்புகளை கொண்டாட வேண்டும். இது பொறாமைப்படும் நேரம் இல்லை என்றார் கமல் ஹாசன்.
Rajinikanth:ரஜினி மீது கோபம்: பொன்னியின் செல்வன் 2 விழாவுக்கு தலைவரை அழைக்காத மணிரத்னம்?
பொற்காலம்இது சோழர்களுக்கு மட்டும் அல்ல தமிழ் சினிமாவுக்கும் பொற்காலம். மணிரத்னத்திற்கு இன்னும் பல மேடைகள் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் எனக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்கிற பேராசை உள்ளது. பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படத்தை எடுக்க முடியாது என்கிற பயம் அனைவருக்கும் உண்டு. மணிரத்னத்திற்கும் அந்த பயம் இருந்திருக்கும். ஆனால் வீரம் என்றால் என்னவென்று தெரியுமா? பயம் இல்லாதது போன்று நடிப்பது. இது பொன்னியின் செல்வன் 2 பட மேடை. இங்கு நானும், மணிரத்னமும் இணையும் படம் பற்றி பேச வேண்டாம் என்றார்.